Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூப்பின் அப்பா!

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூப்பின் அப்பா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நிரூப்பின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அபினய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நிரூப்பின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இவனுக்காக தான் பிக் பாஸே பாக்க ஆரம்பிச்சேன்மா என்ற அவர், ஒவ்வொருத்தரைப் பற்றியும் தனது கருத்தை தெரிவிக்கிறார். இதை போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொள்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி