Home /News /entertainment /

Dare & Sacrifice டாஸ்க்கில் சக போட்டியாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட நிரூப்

Dare & Sacrifice டாஸ்க்கில் சக போட்டியாளர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட நிரூப்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த வாரம் முழுவதும் சர்க்கரை உப்பு மற்றும் வெங்காயம் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று உத்தரவை பிக்பாஸ் வழங்கியுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நிரூப், அமீர், பிரியங்கா, பாவனி, ராஜு, தாமரை மற்றும் சிபி ஆகிய ஏழு போட்டியாளர்களுடன் இறுதிக் கட்டத்தில் உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடையப் போகிறது.

    இந்த வாரம் தான் பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி எலிமினேஷனும் உள்ளது. யார் வெளியேறப்போகிறார் என்பது ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதே நேரத்தில், பிக்பாஸ் ரசிகர்கள் இந்த சீசனில் டாஸ்க்குகள் எதுவும் கடுமையாக இல்லை என்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். ரசிகர்களின் குறையை தீர்க்கும் விதமாக, பிக்பாஸ் இப்போது பரபரப்பான ஒரு டாஸ்க்கை அறிவித்துள்ளார்.

    சீசன் 2-வில் டெலிபோன் பூத் டாஸ்க் மிகக் கடுமையான போட்டியாக இருந்தது. தலைமுடியின் நிறத்தை முழுவதுமாக மாற்றிக்கொள்வது, புருவத்தை நீக்குவது, மொட்டை அடித்துக்கொள்வது என்று மிகவும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டன. அதேபோல புரோமோவில் dare மற்றும் sacrifice என்ற டெலிஃபோன் டாஸ்க் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளன.

    ஒரு பக்கம் dare டெலிபோன் மற்றொரு பக்கம் sacrifice செல்போன் வைக்கபப்ட்டுள்ளது. ஃபோன் அடிக்கும் போது, யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பது காட்சிகளின் மூலம் அறியப்படுகிறது. நிரூப் தியாகம் செய்யும் ஃபோனை எடுத்தவுடன் இந்த வாரம் முழுவதும் சர்க்கரை உப்பு மற்றும் வெங்காயம் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று உத்தரவை பிக் பாஸ் வழங்கியுள்ளார். சர்க்கரை, உப்பு மற்றும் வெங்காயம் ஆகிய மூன்று பொருட்களையும் ஸ்டோர் ரூமில் வைக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இந்த போட்டியை விளையாடியே தீர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில், நிரூப் வீட்டில் இருப்பவர்களை எல்லாம் இந்த டாஸ்க்கை செய்யுமாறு கூறி வருகிறார்.

    உப்பு சாப்பிடாமல் இருக்கறது எவ்ளோ கெத்து தெரியுமா என்று நிரூப் கேட்டதற்கு, அதுல என்ன தில் இருக்குன்னு யார் சொன்னது என்று அமீர் பதிலடி கொடுத்து, டாஸ்க் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார்.

    95 நாள்ல இந்த வீட்ல வேற என்ன இழந்துருக்கோம் என்று அடுத்தடுத்து நிரூப் ஹவுஸ்மேட்ஸ்களை எப்படியாவது சம்மதிக்க வேண்டும் என்று கேட்க, வெக்கம், மானம், சூடு, சுரணை என்று எதுவும் இல்லாமல் தான் இந்த வீட்டில் இருக்கிறேன் என்று பிரியங்கா பதில் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில், முடி வெட்ட சொன்னா என்ன செய்வ என்ற தாமரையின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. எப்படியாவது ஃ பைனல்ஸில் இடம் பெற வேண்டும் என்று கடந்த இரு வாரங்களாக மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் நிரூப். தற்போதைய புரோமோ காட்சிகளின் படி, நிரூப்பின் கோரிக்கையை யாரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.



    இதையும் படிங்க - அமிதாப் பச்சன் வீட்டில் மீண்டும் புகுந்த கொரோனா

    அது மட்டுமின்றி, இந்த வாரம் யார் பணப்பெட்டியை எடுத்து செல்லப் போகிறார் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. மேலும், அடுத்தடுத்து மற்ற ஆறு போட்டியாளர்களுக்கு என்னென்ன உத்தரவுகளை பிக்பாஸ் கொடுக்கப் போகிறார் என்பதும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி