• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: பிக் பாஸ் அக்‌ஷராவை வம்பிழுக்கும் நிரூப்

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் அக்‌ஷராவை வம்பிழுக்கும் நிரூப்

பிக் பாஸ்

பிக் பாஸ்

இந்த வார பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிரூப், அனைவரையும் பாகற்காய் மற்றும் பச்சை மிளகாய் சாப்பிட வைக்கிறார்.

  • Share this:
    இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில் நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘பெட்ரூமை பயன்படுத்த இன்னும் 7 நிமிடங்கள் தான் உள்ளது’ என எச்சரிக்கிறார். பெண்கள் அனைவரும் அவசர அவசரமாக கிளம்புகிறார்கள். பின்னர் டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க, பாகற்காய், பச்சை மிளகாயை சாப்பிட சொல்கிறார்.



    ’அக்‌ஷராவை ஒருநாள் சாப்பிட வைக்கணும்’ என நிரூப் சொல்ல, இன்னும் அவர்களுக்கிடையேயான பிரச்னை தொடர்வதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: