• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா

Bigg Boss Tamil 5: டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா

பிக் பாஸ்

பிக் பாஸ்

முதலாவதாக வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோவில், ’நீயும் பொம்மை, நானும் பொம்மை’ என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, பாடகி சின்னப்பொண்ணு கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’நீயும் பொம்மை, நானும் பொம்மை’ என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஒருவர் வெற்றிக்காக இன்னொருவர் விளையாட வேண்டும் என்பது தான் இதன் விதி. இந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் இருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டதாக பின்னர் அறிவிக்கிறார் பிக் பாஸ். என்ன நடந்தது என இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: