பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய், அக்ஷரா, வருண், வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ், தாமரைச்செல்வி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த நடிகரையே எனக்குத் தெரியாது - சித்தார்த் குறித்து சாய்னா நேவாலின் தந்தை ஹர்வீர் சிங்!
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள
ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் பாடல் ஒலிக்க, கதவு திறக்கிறது. அப்போது நாடியா, மதுமிதா ஆகியோர் வீட்டுக்குள் வருகிறார்கள். இதனால் உற்சாகமடைந்த
பிரியங்கா சந்தோஷத்தில் கத்துகிறார். வீட்டுக்குள் வந்த மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளை கூறுகிறார். என்ன நடக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.