Home /News /entertainment /

சக போட்டியாளர்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

சக போட்டியாளர்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார், அவருக்கு ரோஜாவைக் கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஞ்சித் அறிவிக்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர். அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாகவும், நிரூப் இரண்டாவது ஃபைனலிஸ்டாகவும் தேர்வானார்கள்.

    தற்போது வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில், நாடியா, சுருதி, அபிநை மற்றும் சிபி ஆகியோர் வீட்டுக்குள் மீண்டும் வந்திருந்தனர். இறுதி நாமினேஷனில் வெளியேறிய தாமரை இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதாக முதல் புரோமோவில் காட்சிகள் உள்ளன. அதே போல, வருண் மற்றும் அக்ஷரா இருவருமே வீட்டுக்குள் இருக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகின.

    ஈரமான ரோஜாவே சீஸன் 2 மற்றும் செந்தூரப்பூவே சீசன் 2 சீரியல்களின் குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று விருந்தினர்களாக வருகிறார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே, வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்றன என்பதால், சீரியல் புரமோஷனுக்காக அதன் நடிகர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர்.

    கலகலப்பாக இவர்கள் வருகையைத் தொகுத்து வழங்குகிறார் ராஜு. சீரியல் குழுவினர் வீட்டுக்குள் வராமல், வீட்டின் நுழைவில் கண்ணாடி பெட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து ஹவுஸ்மேட்ஸிடம் உரையாடுகிறார்கள். தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், மனம் கவர்ந்த போட்டியாளருக்கு ரோஜா கொடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார், அவருக்கு ரோஜாவைக் கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஞ்சித் அறிவிக்கிறார்.

    அதன் படி, பலரும் தங்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் ராஜு என்று ராஜுவுக்கு அனைவரும் ரோஜாப் பூவை கொடுத்து மகிழும் காட்சிகள் உள்ளன. ராஜுவின் கைகளில் மற்றும் தலையில் நிறைய ரோஜாப்பூக்கள் உள்ளன. இதில் சிபி, வருண் மற்றும் தாமரை ராஜுவுக்கு ரோஜாப்பூவைக் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. பிற போட்டியாளர்கள் மற்றும் மீண்டும் வருகை தந்தவர்கள் யாரெல்லாம் மனம் கவர்ந்த போட்டியாளராக ராஜுவைத் தேர்வு செய்தனர் மற்றும் வேறு யாரெல்லாம் மனம் கவர்ந்த போட்டியாளராக ரோஜாப்பூவைப் பெற்றனர் என்பது பற்றி இன்றிரவு காணலாம்.



    சீரியல் குழுவினருடன் உரையாடும் நிகழ்ச்சியில், பிரியங்கா இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாவது புரோமோவிலும் பிரியங்கா இருக்கும் காட்சிகள் இல்லை. எனவே, பிரியங்காவிற்கு உடல் நலம் சரியில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி