Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: என்னுடைய பேச்சை யாரும் கேட்பதில்லை - கண்கலங்கும் கேப்டன் மதுமிதா!

Bigg Boss Tamil 5: என்னுடைய பேச்சை யாரும் கேட்பதில்லை - கண்கலங்கும் கேப்டன் மதுமிதா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மதுமிதாவை பொறுத்தவரை மிகவும் அமைதியாக இருப்பவர், ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த மொழி

  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில், பாவ்னி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த வாரம் வீட்டின் தலைவராக மதுமிதா உள்ளார்.

  இதனிடையே பஞ்சதந்திரம் டாஸ்க் நடைபெற்ற நிலையில் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று பாவ்னி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகிய ஐந்து பேரிடம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்து நாணயங்கள் உள்ளன. இதில் இந்தவாரம் நெருப்பு நாணயத்தை வைத்துள்ள இசைவாணிக்கு சமையலறையை கட்டுப்படுத்தும் சக்தி வழங்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். அதன்படி வீட்டில் என்ன சமைக்க வேண்டும், என்ன என்ன பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட அனைத்தும் இசைவாணி கட்டுப்பாட்டில் வந்தது.

  ஆனால் ஹவுஸ் மேட்ஸ் யாரும் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வழக்கம்போலவே இருந்தனர். இதனால் கடுப்பான இசைவாணி தனியாக புலம்பி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் இசைவாணியை அழைத்த பிக் பாஸ், உங்களுக்கு வழங்கப்பட்ட சக்தியை நீங்கள் முறையாக பயன்படுத்துங்கள், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை ஹவுஸ்மேட்ஸ்களை செய்ய சொல்லுங்கள் என அறிவுத்தினார். இதனை தொடர்ந்து இனிமேல் நான் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும், இந்த வாரம் முழுவதும் நான் தான் இந்த வீட்டில் ரூல்ஸ் போடுவேன் என்றார். அப்போது சமையலறை மட்டும் தான் இசைவாணியின் கட்டுப்பாட்டில் வரும் என சிபி கூறினார்.

  இதுகுறித்த தெளிவான புரிதல் இல்லாத நிலையில், இதனால் பிரச்னை ஏற்படுவது இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், வீட்டின் தலைவரான மதுமிதாவின் உத்தரவுகளை யாரும் கேட்பதில்லை என கூறி அவர் அழுகிறார். எனக்கு கஷ்டமாக உள்ளது, நான் எது கூறினாலும் யாரும் அதனை கேட்பதில்லை. இப்போது இசைவாணி தான் எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார், அப்போ நான் எதற்கு? நான் தான் இந்த வீட்டில் வீக்கான போட்டியாளரா? அவங்க தான் எல்லாம் பண்றாங்க, நான் ஹவுஸ் மேட்ஸ் தூங்காமல் இருக்கும் வேலையை மட்டும் தான் பார்த்து கொண்டிருக்கிறேன் யாரெல்லாம் உன் பேச்சை கேட்கவில்லை, வீடு முழுவதும் இசைவாணி கட்டுப்பாட்டில் வருமா? என பிக் பாஸிடம் கேளு என சிபி மற்றும் நிரூப் அவரை சமதப்படுகின்றனர்.

  மதுமிதாவை பொறுத்தவரை மிகவும் அமைதியாக இருப்பவர், ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த மொழியில் பேசும் அவர், வீட்டின் தலைவராக இருந்தாலும் அதிகாரமாக செயல்பட தெரியாமல் மிகவும் அன்பாகவே இருக்கிறார். இதனிடையே நேற்று இசைவாணியின் கேட்காமல் காபி போட்டதால், மதுவிற்கு வித்தியாசமாக நடந்து செல்லும் செல்லும் தண்டனையை இசைவாணி வழங்கினார். மேலும் இந்த குழப்பத்தால் நேற்று நடைபெற்ற 'ஊரு விட்டு ஊரு வந்து' டாஸ்கில் சரியாக செல்படாததால் மதுமிதா இரவு முழுவதும் நெருப்பு மூட்டி அதனை அணையாமல் பார்த்து கொள்ளும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் பாவ்னியும் இந்த தண்டனையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இசைவாணி குறித்து அனைவரும் விமர்சனம் செய்கின்றனர். அப்போது, எல்லாரும் மறந்து எதாச்சும் பண்றாங்கன்னு நீ ஹர்ட் ஆகுற என மதுமிதா கூற, “ஹர்ட் ஆகுது ஹர்ட் ஆகுதுன்னா ஆகாதா?” என்கிறார் இசைவாணி. இதனால் பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் மதுமிதா ஒரு புறமும், இசைவாணி ஒரு புறமும் இருந்து அழுது கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி