ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க இதான் கடைசி சான்ஸ்

போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க இதான் கடைசி சான்ஸ்

பிக் பாஸ் சஞ்சீவ்

பிக் பாஸ் சஞ்சீவ்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி வாய்ப்பு தரப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி வாய்ப்பு தரப்படுகிறது. அதில் 8 நபர்களும் ஜோடியாக பிரிந்து யாரை காப்பாற்ற வேண்டும் என சொல்ல வேண்டும். இதில் இருவருமே ஒரே மாதிரியான பதிலை கூற வேண்டும். அப்போது சஞ்சீவ், ராஜூ ஜோடியாகிறார்கள். என் ஃபேமிலி வர வரைக்குமாவது நான் இந்த வீட்ல இருக்க விரும்புறேன் என்கிறார் சஞ்சீவ். உள்ள வந்து அந்த வீட பாக்கணும்ன்னு அவங்க பாப்பா அவர் கிட்ட கேட்டுருக்கு, என சஞ்சீவை காப்பாற்ற முயற்சிக்கிறார் ராஜு. இதனால் உணர்ச்சிவசப்பட்ட சஞ்சீவ், ராஜுவை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறார். என்ன நடக்கும் என இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5