• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss : தாமரைக்கு அறிவுரை சொன்ன சிபி - ஏன் தெரியுமா?

Bigg Boss : தாமரைக்கு அறிவுரை சொன்ன சிபி - ஏன் தெரியுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பள்ளிக்கூட நினைவுகளை மீட்டெடுக்கும் கனா காணும் காலங்கள் டாஸ்க் வழங்கப்படுகிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதோடு சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். தொடர்ந்து பாடகி இசைவாணி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பள்ளிக்கூட நினைவுகளை மீட்டெடுக்கும் கனா காணும் காலங்கள் டாஸ்க் வழங்கப்படுகிறது. சிபி முதல்வராகவும், ராஜு, அபிஷேக் ஆசிரியராகவும் மற்றவர்கள் மாணவர்களாகவும் இதில் பங்கு பெறுகின்றனர். அப்போது அக்‌ஷரா மற்றும் ஐக்கி முடியின் கலரை மாற்றினால் தான் பள்ளிக்கு வர முடியும் என ஆசிரியர் சிபி கூற, உடனே நிறத்தை மாற்றுகின்றனர். பின்னர் ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டுமென தாமரையிடம் கூறுகிறார் சிபி. இந்த ஜாலியான டாஸ்க் ரசிகர்களை கவருமா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: