• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உடை குறித்து கருத்து தெரிவித்த தாமரை செல்விக்கு கமல் கொடுத்த அட்வைஸ்!

உடை குறித்து கருத்து தெரிவித்த தாமரை செல்விக்கு கமல் கொடுத்த அட்வைஸ்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

இன்றைய பிக் பாஸில் உடை பற்றிய சர்ச்சை குறித்து விசாரிக்கும் கமல், தாமரை செல்விக்கு தனது தவறை சுட்டிக் காட்டுகிறார் கமல்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து, நாடியா சங், அபிஷேக் ராஜா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இன்றைய எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’உடை பற்றிய நிறைய கருத்துக்கள் இங்கே வலம் வந்துச்சு. சிபி சொல்றதுக்கு முன்னாடி, தாமரை தான் அடக்கம்ங்கற வார்த்தையை உபயோகிச்சது. ஏன் பிடிக்கல’ என தாமரையிடம் கேட்கிறார் கமல். அதற்கு, ‘இந்த மாதிரியெல்லாம் நான் பாத்ததே இல்ல சார். சினிமாவுல தான் பாத்துருக்கேன்’ என தாமரை சொல்ல, ’இதனால உங்களுக்கு எந்த பலனும் இல்ல. இது ஒரு தன்மான கோபம் கூட கிடையாது. ஒரு குழப்பத்துல வர்ற கோபம்’ என்கிறார் கமல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: