• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: எலிமினேஷனில் இருந்து ஐக்கியை காப்பாற்றிய கமல்!

Bigg Boss Tamil 5: எலிமினேஷனில் இருந்து ஐக்கியை காப்பாற்றிய கமல்!

ஐக்கி பெர்ரி

ஐக்கி பெர்ரி

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஐக்கி காப்பாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார் கமல்.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதற்கிடையே இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. யார் வெளியேற போறாங்கன்னு எனக்கு அங்கருந்து தகவல் வந்து விட்டது. நேரடியாகவே சொல்லிடலாம். அதற்கு முன்பு ஒருவரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது’ என்றவாறு ’என்ன ஐக்கி சிரிக்கிறீங்க’ என்கிறார் கமல். ‘எதுவா இருந்தாலும் ஏத்துக்க வேண்டியது தான் சார்’ என ஐக்கி கூற, ‘அதனால தான் உங்கள காப்பாத்திட்டாங்க போல’ என்கிறார் கமல்.


    இதன் மூலம் ஐக்கி பெர்ரி காப்பாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: