• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என்னால் ஏன் தனியாக விளையாட முடியாது? அபிஷேக் பேச்சால் கடுப்பான இசைவாணி!

என்னால் ஏன் தனியாக விளையாட முடியாது? அபிஷேக் பேச்சால் கடுப்பான இசைவாணி!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பிக் பாஸ் ப்ரோமோவில், ஒரு நாணயத்தை எடுப்பதற்காக அதன் அருகிலேயே இசை மற்றும் ஸ்ருதி நிற்கிறார்கள்.

  • Share this:
    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்யவிருக்கிறது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் உள்ளனர்.

    இந்தநிலையில் நாமினேஷன் மாற்றம் கொண்டு வரும் வகையில் பஞ்சதந்திரம் என்ற புதிய டாஸ்க் ஒன்று கடந்த செய்வாய்க்கிழமை கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

    ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என கூறப்பட்ட நிலையில், இந்த டாஸ்கில் ஒருவர் காயினை திருட அவரிடம் இருந்து மற்றொருவர் திருட என நேற்று முழுவதும் இந்த டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் குழுவாக பிரிந்து விளையாடினர். இந்த டாஸ்க் இன்றும் நடைபெறுவது இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களில் உறுதியாகியுள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஒரு நாணயத்தை எடுப்பதற்காக அதன் அருகிலேயே இசை மற்றும் ஸ்ருதி அமர்ந்திருக்கின்றனர். அப்போது அங்கு வரும் அபிஷேக், இப்போது நான் உன்னிடம் ஒரு டீல் பேச வந்திருக்கிறேன், ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டாய் என்பது எனக்கு தெரியும் என்கிறார். நீ ஏன் டீமாக யோசிக்கிறாய் என ஸ்ருதி கேட்க? நீ எனக்கு நாணயத்தை எடுக்க ஒத்துழைக்கவில்லை என அபிஷேக் கூறுகிறார். அதற்கு ஸ்ருதி, நான் வந்ததில் இருந்து இசை கூட தான் இருக்கிறேன் என்கிறார்.



    அப்போது அபிஷேக், இசையால் தனியாக விளையாட முடியாது என்கிறார். இதனை கேட்டு கடுப்பான இசை, என்னால் ஏன் தனியாக விளையாட முடியாது? பாவ்னி ஸ்ட்ராங் போட்டியாளர், நான் வீக் போட்டியாளரா? என கோபமாக கேட்கிறார். இதனை தொடர்ந்து சிபி - வருண் இடையே பிரச்சனையை ஏற்படுத்த அபிஷேக் முயலும் நிலையில், நீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்று விட்டால் இந்த வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அழுவார்கள் என கலாய்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெற்று யார் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பது குறித்து இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: