இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில் நாடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் வீட்டில் காயின் சண்டை நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “அண்ணாச்சி மட்டும் நான் என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாரு. ஓகே கேக்கலைன்னா நேரடியா
கமல் சார் கிட்டயே பேசிக்க வேண்டியது தான்” என்கிறார் இசைவாணி. ”நீங்க சொல்றத மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறீங்க” என அக்ஷரா சொல்ல, “பாட்டு பாடுறத மறந்த, இன்னொன்னு நல்லா பாசமா பேசிட்டு திடீர்ன்னு மாற்ர.. இது என்னன்னே புரியலை” என
தாமரைச்செல்வி சொல்ல, “என்னக்கா இப்படியெல்லாம் பேசுறீங்க” என்கிறார் இசைவாணி.
”எல்லாரும் மறந்து எதாச்சும் பண்றாங்கன்னு நீ ஹர்ட் ஆகுற” என மதுமிதா கூற, “ஹர்ட் ஆகுது
ஹர்ட் ஆகுதுன்னா ஆகாதா?” என்கிறார் இசைவாணி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.