Home /News /entertainment /

இது நட்பா, காதலா? மீண்டும் தலைதூக்கும் அபினய் - பாவனி பிரச்சனை!

இது நட்பா, காதலா? மீண்டும் தலைதூக்கும் அபினய் - பாவனி பிரச்சனை!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பாவனி - அபிநய் உறவு குறித்து இன்றைய டாஸ்கில் விவாதிப்பதும் அதனால் பாவனி கடுப்பாவதும் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்‌ஷரா, தாமரை ஆகியோர் இருக்கின்றனர்.

    இவர்களில் ஆரம்பத்தில் இருந்தே பாவ்னி - அபினய் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இதனிடையே ஆரம்பதில் அபினய் தன்னை காதலிப்பதாக சந்தேகித்த பாவ்னி, அவரிடமே இதுகுறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த அபினய், அப்படி எதுவும் இல்லை நமக்குள் நல்ல நட்பு மட்டும் இருப்பதாக கூறியதையடுத்து பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ட்ரூத் அண்ட் டேர் விளையாடினர். அப்போது அபினயிடம், நீ பாவ்னியை லவ் பண்ணுறியா? என அனைவரின் முன்னிலையிலும் ஓப்பனாக கேட்டார் ராஜு. இதனை கேட்டு பாவ்னி மற்றும் அபினய் மட்டுமின்றி சக ஹவுஸ் மேட்ஸ் மற்றும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அபினய் திருமணமானவர். அவருக்கு குடும்பம், மனைவி, குழந்தை இருப்பது தெரிந்தும் நீ எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்? என பிரியங்கா, ராஜுவிடம் கேட்டார். அதற்கு ராஜு அந்த விளையாட்டின் போது என் மனதில் தோன்றியதை தான் நான் எதார்த்தமாக கேட்டேன். ஆனால் நான் கேட்டிருக்க கூடாது என கூறினார். மேலும் இதுகுறித்து அனைவர் முன்னிலையில் பாவ்னியிடம் மன்னிப்பும் கேட்டார்.

    இதனை தொடர்ந்து அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தார். அமீர் வந்தது முதல் பாவனியுடன் நட்பாக பழகி வருகிறார். சமீபத்தில் அமீருடன் பாவ்னி சிரித்து பேசி கொண்டிருந்தார். அப்போது இருவரும் மாறி மாறி அடித்து விளையாடினர். அங்கே அபினையும் இருந்த நிலையில் இதனை பார்த்து அவர் கடுப்பானது வெளிப்படையாகவே தெரிந்தது.

    மேலும் இதனை பார்த்த இமான் அண்ணாச்சியும் இதுகுறித்து அமீரை அழைத்து என்ன தான் நட்பாக பழகினாலும் அடித்து விளையாடுவது சரியல்ல என அட்வைஸ் செய்தார். இதனை தொடர்ந்து ராஜுவும், அமீரை அழைத்து இதுகுறித்து பேசினார். அப்போது அமீர், நான் பாவ்னியிடம் பேசுவது அபினய்-க்கு பிடிக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்தார். யார் என்ன பேசினாலும் நான் நட்பாக தான் பழகுகிறேன் என பாவ்னி கூலாக இருக்கிறார்.



    இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து இன்றைய டாஸ்கில் விவாதிப்பதும் அதனால் பாவனி கடுப்பாவதும் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், நான் அபினய் கூட தனியாக உட்கார்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன், அது எங்களது விருப்பம் உனக்கு இதை பற்றி பேச உரிமை இல்லை நீ ஏன் பேசுகிறாய் நீ யார்? என ராஜூவை பார்த்து கேட்கிறார். அப்போது குறுக்கிடும் சிபி, இது நட்பு இல்லை காதல் இல்லை என்றால் வேறு என்ன? என்கிறார். அதற்கு பாவ்னி இது எனது தனிப்பட்ட பிரச்சனை என கூற, நான் அப்படி தான் பேசுவேன் என சிபி கூறும் காட்சிகள் உள்ளது.

    இன்று வெளியான முதல் மற்றும் இரண்டாவது ப்ரோமோக்களில் பிரியங்கா - ராஜு மற்றும் பிரியங்கா - தாமரை இடையே மோதல் ஏற்படும் காட்சிகள் இருந்த நிலையில் தற்போது பாவ்னி - அபினய் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி