• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5: பிக் பாஸ் வீட்டில் கொளுத்திப் போடுவது அபிஷேக் தான் - இமான் அண்ணாச்சி!

Bigg Boss 5: பிக் பாஸ் வீட்டில் கொளுத்திப் போடுவது அபிஷேக் தான் - இமான் அண்ணாச்சி!

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

Bigg Boss Promo: 'அபிஷேக்கை நெருப்பா பாக்குறேன். ஏன்னா அவர் கொளுத்தி போடுறது மாதிரி தெரியுது’ என்கிறார் பிக் பாஸ் இமான் அண்ணாச்சி

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    அதில் போட்டியாளர்கள் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, யார் இங்கே நெருப்பு என பேசிக் கொள்கிறார்கள். அப்போது சிபி, “என்னை நான் நெருப்பா பாக்குறேன், யாராச்சும், கை விட்டு, கால் விட்டு பாக்கணும்ன்னு நினைச்சாங்கனா சுட்டுடுவேன்” என்கிறார். பின்னர் பேசும் தாமரை, “அண்ணாச்சியை நெருப்பா பாக்குறேன். ஏன்னா நல்லா காமெடி பண்ணுவாங்க. எந்த நேரம் அந்த குணம் மாறுதுனே தெரியாது” என்கிறார்.



    பின்னர் பேசும் இமான் அண்ணாச்சி, ‘அபிஷேக்கை நெருப்பா பாக்குறேன். ஏன்னா அவர் கொளுத்தி போடுறது மாதிரி தெரியுது’ என்று கூற, அப்போது ‘அபிஷேக்கை பத்தி சொன்னது எனக்கு தவறா தெரியுது” என்கிறார் சிபி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: