• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அக்‌ஷராவை அழ வைத்த இமான் அண்ணாச்சி - தனியாக புலம்பும் பிரியங்கா!

அக்‌ஷராவை அழ வைத்த இமான் அண்ணாச்சி - தனியாக புலம்பும் பிரியங்கா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

நேற்று முதலில் தாமரை பாடல் இசைக்கப்பட்டது. உடனடியாக மேடைக்கு சென்று அவர் நடனமாடினார்

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது நான்கு வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் நிரூப், பாவ்னி, அக்ஷ்ரா, ஸ்ருதி, ஐக்கி, இசைவாணி, மதுமிதா, அபினய், சிபி ஆகிய 9 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், "சினிமா சினிமா" என்ற பெயரில் டான்ஸ் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு தனித்தனி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே செய்யப்படும் போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து நடனம் ஆட வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். மேலும் நடனம் ஆடும் நேரத்தை தவிர பிற நேரங்களில் தங்களது கதாபாத்திரத்துடன் ஒன்றி நடந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

    அதில் சிபிக்கு - ரஜினிகாந்த், வருண் - சிட்டி ரோபோ, இசைவாணி - சந்திரமுகி, ஸ்ருதி - ஜெனிலியா, அக்ஷ்ரா - நீலாம்பரி, பாவ்னி - கஜினி, பிரியங்கா - காண்ட்ராக்டர் நேசமணி, மதுமிதா - 23ம் புலிகேசி, அபினய் - தெய்வத்திரு திரைப்பட கிருஷ்ணா, நிரூப் - அம்பி, தாமரை - கனகா, ராஜு - எம்.ஆர். ராதா, இமான் - நடிகர் திலகம் சிவாஜி கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

    நேற்று முதலில் தாமரை பாடல் இசைக்கப்பட்டது. உடனடியாக மேடைக்கு சென்று அவர் நடனமாடினார். இதனை தொடர்ந்து சிபி, இசைவாணி சிறப்பாக டான்ஸ் ஆடினர். இத்துடன் இந்த டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று மீதமிருப்பவர்கள் டான்ஸ் ஆடுவார்கள் என எதிர்பார்க்காடுகிறது.

    இந்தநிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், "சினிமா சினிமா" டாஸ்கில் யாரெல்லாம் சிறப்பாக செயல்படவில்லை என பிக் பாஸ் கேள்வி எழுப்புகிறார். அதில் இமான், அக்ஷ்ராவை கூறுகிறார். ஒரு வேலை அக்ஷ்ரா, நீலம்பரி கதாபாத்திரத்தை பார்க்கவில்லையா? அந்த படம் குறித்து தெரியவில்லையா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என இமான் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் சிபி, இல்லை அக்ஷ்ரா அவரது கதாபாத்திரத்தை நன்றாக செய்தார் என்கிறார். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத இமான், இல்லை எனக்கு சரியாக தெரியவில்லை என்கிறார். மேலும் அக்ஷ்ரா, என்னிடம் நீலாம்பரி போல ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்கிறார். அதற்கு அக்ஷ்ரா, உங்கள் வயதிற்கு நீலாம்பரி போல சொடக்கு போட்டு பேசுவதை எனக்கு சரியாக தெரியவில்லை என கூறும் காட்சிகள் இருந்தது. மேலும் இதனால் மனவருத்தம் அடையும் அக்ஷ்ரா, தனியாக அமர்ந்து அழும் காட்சிகளும் இருந்தது.



    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில், இமான் விமர்சனம் குறித்து ராஜுவிடம், பிரியங்கா பேசி கொண்டிருக்கிறார். அப்போது, இமான் அண்ணாச்சி அப்படி பேசியது மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது, நான் நேரடியாகவே அண்ணாச்சியிடம், பாராட்ட வேண்டிய இடத்தில் நீங்கள் அக்ஷ்ரா குறித்து அப்படி பேசியது அவர் மனதை கஷ்டப்படுத்திவிட்டது என கூறிவிட்டேன் என்கிறார். அதற்கு ராஜுவும் ஆம், நானும் அதனை கூறி விட்டேன் என்று சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார். அப்போது பிரியங்கா, இந்த வீட்டில் எது சொன்னாலும் தவறு, சொல்ல வேண்டும் என நினைத்தாலும் தவறு, சொல்லாமல் இருந்தாலும் தவறு என தனியாக புலம்பும் காட்சிகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இமான் - பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இதனால் இன்று பிரச்னை வரும் என எதிர்பாக்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: