• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: நாமினேஷனில் இருந்து தாமரை செல்வியை காப்பாற்ற நினைக்கும் ஹவுஸ் மேட்ஸ்!

Bigg Boss Tamil 5: நாமினேஷனில் இருந்து தாமரை செல்வியை காப்பாற்ற நினைக்கும் ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 5 Promo: இரண்டாவது ப்ரோமோவில் தாமரை செல்விக்கு ஆதரவாக அபிஷேக், பிரியங்கா மற்றும் ராஜு பேசுகின்றனர்

  • Share this:
    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

    தற்போது இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில் நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், கதை சொல்லட்டுமா டாஸ்கின் போது நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு ஆக்டிவிட்டி ஏறியாவிற்கு வந்தவர்கள் அடிப்படையில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த வீட்டில் ஜொலித்தவர் யார் என்ற தேர்வு நடைபெற்றதில் இமான் வெற்றி பெற்றதால் அவரும் இந்த டாஸ்கில் பங்கேற்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

    அதில் போட்டியாளர்களான இமான், ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை ஆகியோர் சிலை போல நிற்கவேண்டும், மற்றவர்கள் அவர்களது சிரிப்பு, அழுகை, கோவம், பயம் போன்ற ஏதேனும் ஒரு உணர்வை தூண்ட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கிற்காக நிரூப், அபிஷேக் ராஜா பெண் போல உடை அணிந்து காமெடியாக நடித்தனர். இதனிடையே இமான், அபிஷேக் இடையே சில கருத்து மோதல்களும் நடந்தது. இறுதியாக சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் இன்று ஒரு புதிய டாஸ்க் ஒன்றை கொடுப்பது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரிகிறது. அதில், பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஜக்கி, மது, மற்றும் வருண் தலா ஒரு நாணயத்தை எடுத்திருப்பது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.



    இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தாமரை செல்விக்கு ஆதரவாக அபிஷேக், பிரியங்கா மற்றும் ராஜு பேசுகின்றனர். முதலில் தாமரையிடம் பேசும் அபிஷேக் உங்களுக்காக தான் நாங்கள் இதனை செய்கிறோம் என கூற, தாமரை அவரது காலில் விழுந்து நீங்கள் கூறியதே போதும் என அழுகிறார். பின்னர் இமான், ராஜுவிடம் நீங்கள் யாரை காப்பாற்றப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு ராஜு, நான் தாமரையை காப்பாற்றப்போகிறேன் என்கிறார். இதனை தொடர்ந்து பிரியங்காவும், தாமரையை காப்பாற்றுவேன் என கூற இமான், ஏன் எல்லாரும் தாமரையை மட்டும் கூறுகிறீர்கள், சின்ன பொண்ணுவை கூறவில்லை என கேட்கிறார்.

    அதற்கு பிரியங்கா, நான் தான் சின்ன பொண்ணுவை நாமினேட் செய்தேன் என உண்மையை கூறும் காட்சிகள் உள்ளது. இதனிடையே தனியாக அமர்ந்து தாமரை அழுது கொண்டிருக்கும் காட்சிகளும் உள்ளது. நாடக கலைஞரான தாமரை செல்வி மிகவும் வெகுளியாக இருப்பதால் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே மற்றும் ரசிகர்களுக்கும் அவரை விரும்புகின்றனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் தாமரை இருக்கும் நிலையில் அவர் விடுவிக்கப்படுகிறாரா? டாஸ்கில் வெற்றி பெறுவது யார் என்பது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: