சுருதியின் ஆடை சரியில்லை என்று கூறிய தாமரைச் செல்வி! நீங்கள் மட்டும் சரியா என்று எதிர்கேள்வி கேட்ட சிபி! என்று இன்றைய மூன்றாவது புரோமோ அனல்பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன்களில் எப்போதுமே விவாத மேடை டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அனைத்து சீசன்களிலும் இடம் பெறும் இந்த டாஸ்க், சீசன் 5 விலும் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
இன்றைய விவாத மேடைக்கான தலைப்பு,
பட்டிக்காடா பட்டணமா! ராஜு வழக்கம் போல நகைச்சுவையாக பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, தாமரை பேசினார். அதில், 'கிராமம் மாதிரி வரவே வராது. நீ துணி உடுத்தறது எனக்குப் பிடிக்கவே பிடிக்கல' என்று சுருதியைப் பார்த்து தாமரை பேசியது சலசலப்பை உண்டாக்கியுள்ளது. சுருதிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சிபி 'நீங்க அடக்க ஒடுக்கமா இருக்கீங்களா?' என்று எதிர்கேள்வி கேட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் அப்படி என்ன அடக்கம் இல்லாம இருக்கேன், அத நீங்க பாத்தீங்களா என்று விவாத மேடை முடிந்த உடன், டைனிங் ஹாலில் தாமரை சிபியிடம் விளக்கம் கேட்கிறார். அதற்கு சிபி ஏதோ பதில் சொல்ல முயற்சிக்க, அபிநய் தாமரையை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்.
தாமரை சொன்னதை சிபி தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டாரா? சிபி என்ன அர்த்தத்தில் தாமரையை அடக்கமாக இல்லை என்று கூறினார் என்பதும் குழப்பமாக இருக்கிறது.
இந்த வாரம் தொடங்கியது முதலே, தாமரைச்செல்வி லைம்லைட்டில் இருக்கிறார். பாவனியும் ஸ்ருதியும் தாமரையின் நாணயத்தை எடுத்த போது தொடங்கிய சண்டையில், தாமரை தனக்கு மிகப் பெரிய அநீதி நடந்துவிட்டதாக சொல்கிறார். ஸ்ருதியும் பாவனியும் நாங்கள் கேமை தான் விளையாடினோம் என்றனர்.
நாணயம் டாஸ்க்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் சண்டையும், சில போட்டியாளர்களிடையே தொடரும் நிலையில், மற்றொரு பிரச்சனையை தொடங்கியுள்ளார் தாமரைச்செல்வி. தற்போது, விவாதம் யூ-டர்ன் எடுத்து தாமரைக்கும் சிபிக்கும் என்று மாறியுள்ளது.
எந்த டாஸ்க் கொடுத்தாலும் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாமல் ஏனோ தானோவென்று பங்கேற்ற போட்டியாளர்கள் நேற்றைய எபிசோடில் பிக்பாசிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். பிக் பாஸ் தமிழ் ரசிகர்கள், கடுப்பாகி, சமூக வலைத்தளங்களில் போட்டியாளர்களை வறுத்தெடுப்பது மட்டுமில்லாமல், வரலாற்றில் இல்லாத அளவுக்கு நேற்று பிக் பாசே கடுப்பாகி விட்டார். கடந்த செவ்வாய் அன்று நடந்த எபிசோடில், தன்னுடைய நாணயத்தை சுருதியும், பாவனியும் திட்டம் போட்டு திருடிவிட்டனர் என்று சண்டை போட்டு, அழுது புலம்பிக் கொண்டிருந்த தாமரையும் நேற்று ஆட்டம் பாட்டம் என்று அமைதியாகவே இருந்தார். இன்று புயல் மீண்டும் வீசத் தொடங்கியது போல, மீண்டும் தாமரை சுருதியின் ஆடை பற்றி தன்னுடைய கருத்தைக் கூறி, மற்றொரு பிரச்சனையை தொடங்கி விட்டார்.
கிராமத்துப் பெண்ணான
தாமரைக்கு சுருதியின் ஆடை அணியும் ஸ்டைல் உண்மையிலேயே பிடிக்கவில்லையா அல்லது தன்னுடைய நாணயத்தை திருடிய காரணத்துக்காக
சுருதி மீது குறை சொல்கிறாரா என்பதும் தெரியவில்லை.
இன்றைய எபிசோடின் மூன்றாவது
ப்ரோமோ இங்கே!
எப்படி இருந்தாலும், இன்றைய பட்டிக்காடா பட்டணமாக விவாத மேடை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.