Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: போட்டியாளர்களுக்கு கடைசி டேர்கொடுத்த பிக் பாஸ்

Bigg Boss Tamil 5: போட்டியாளர்களுக்கு கடைசி டேர்கொடுத்த பிக் பாஸ்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் ஃபோன் ஒலிக்கிறது. அதில் வீட்டுக்கான கடைசி டேரை கொடுக்கிறார் பிக் பாஸ்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அக்‌ஷரா - வருண் இருவரும் ஒன்றாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.



    இதையும் படிங்க - 2 வருடம் கழித்து குழந்தைகளுக்காக இது... கார்த்தி பகிர்ந்த க்யூட் படம்!

    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் ஃபோன் ஒலிக்கிறது. அதில், “இந்த வீட்டுக்கான இறுதி டேர், உலகத்தின் பார்வையில ஒரு முகத்தை மறைச்சிருக்காரு. ஆனா அத நாங்க கவனிச்சோம்ன்னு தேர்ந்தெடுத்து சுத்தம் செஞ்சு நேரடியா இறுதி வாரத்துக்கு அனுப்பலாம்” என்கிறார் பிக் பாஸ். அதன் பின் “உங்களுக்கு என் மேல எவ்வளவோ வருத்தம் இருக்கும். அதை ஓபனா சொல்லுங்க” என்கிறார் ராஜு. யார் இறுதி வாரத்துக்கு நாமினேட் ஆவார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக் கொள்வோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி