• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil 5: நீ என்ன பெரிய அப்பாடக்காரா? நிரூப்பிடம் சரமாரியாக கேள்வி எழுப்பும் வருண்!

Bigg Boss Tamil 5: நீ என்ன பெரிய அப்பாடக்காரா? நிரூப்பிடம் சரமாரியாக கேள்வி எழுப்பும் வருண்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த டாஸ்கில் நிரூப் குறித்து வருண் பேசுவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், உன் ஆளுமை வந்தபோது நீ கூறியதை நான் உட்பட அ

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சில் தற்போது வரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது இசைவாணி, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபினய் வாடி, பாவ்னி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

  இதில் இசைவாணி, அபினய், பாவ்னி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 9 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். மேலும் இந்த வாரம் நீர் நாணயத்திற்கான ஆளுமை வருணிற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஆளுமைகளுக்கு கிடைக்காத பல சலுகைகள் வருணிற்கு இந்த வாரத்தில் கிடைத்துள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டின் நீர்க்கட்டுப்பாடு முழுக்க அவருக்கு கிடைத்தது. எனவே வருண் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நீரை நிறுத்த முடியும். சக ஹவுஸ் மேட்ஸிற்கு தேவைப்பட்டால் வெளியே இருக்கும் பைப்பின் மூலம் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து எடுத்து வர வேண்டும். அந்த பைபிளும் அருகே இருக்கும் சைக்கிளை ஓட்டினால் தான் தண்ணீர் வரும். மேலும் தினமும் பல் விளக்கி விட்டு வருணிடம் காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

  இதனையடுத்து வருண் தனது ஆளுமையை சிறப்பாக செய்து வருகிறார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பாத்ரூம் செல்லும் நபர்களுக்கு சில வேடிக்கையான டாஸ்குகள் கொடுத்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார். மேலும் இந்த வார தலைவரான பிரியங்காவுடன் சேர்ந்து வீட்டை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே வருண் - நிரூப் இடையே எப்போதும் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்து வருகிறது. முன்னதாக "நீயும் பொம்மை நானும் பொம்மை, தெரியும் உண்மை" என்ற டாஸ்கில் நிரூப், அக்ஷ்ராவை செல்ல விடாமல் பிடித்து கொண்டார். அக்ஷ்ராவிடம், வருண் பொம்மை இருந்ததால் வருண் - நிரூப் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருவருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.

  இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். இரண்டாவது நாளான நேற்று, முதல் சுற்றில் இருந்த ஜோடிகள் அனைத்தும் மாற்றப்பட்டன. அதன்படி, அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் டாஸ்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இன்றும் தொடரும் இந்த டாஸ்கில் நிரூப் குறித்து வருண் பேசுவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், உன் ஆளுமை வந்தபோது நீ கூறியதை நான் உட்பட அனைவரும் கேட்டு நடந்தனர். ஆனால் நீ யார் கூறுவதையும் கேட்பதில்லை, நீ என்ன பெரிய அப்பாடக்காரா? நீ உயரத்தில் பெரியவனாக இருந்தால் பெரிய மாஸா? நீ என்ன வேண்டுமானாலும் செய், நான் உன்னை வச்சு செய்வேன் என வருண், நிரூபிடம் கூறுகிறார். இதனால் இன்று சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில், இசைவாணி - தாமரை பிரச்சனை தொடர்கிறது. அதில் மனசாட்சி படி கூறு நீ நக்கலாக பாட்டு பாடினாயா? அல்லது சந்தோசமாக பாடினாயா? என இசை கேட்கிறார். அதற்கு தாமரை, நான் என் சந்தோஷத்திற்காக பாடினேன், உன்னை பற்றி பேச அதற்குமேல் ஒன்றுமில்லை, இருந்தா தானே பேச என்கிறார். மேலும் மனசாட்சியை கொன்று விட்டு என்னால் வாழ முடியாது என கூறிவிட்டு தாமரை எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த டாஸ்கில் இன்றும் பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: