Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: மட்டம் தட்டி பேசுகிறாரா பிரியங்கா? தாமரை குற்றச்சாட்டு...

Bigg Boss Tamil 5: மட்டம் தட்டி பேசுகிறாரா பிரியங்கா? தாமரை குற்றச்சாட்டு...

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

நாடகம் போடறீங்க என பிரியங்கா கூறியதை தன்னுடைய தொழில் குறித்து பேசியதாக எடுத்து கொண்ட தாமரை, ராஜுவிடம் இதுகுறித்து பேசினார்.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி, அபிஷேக் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாக உள்ளனர்.

    இந்த டாஸ்கில் "வெற்றிக்கொடி கட்டு" என்ற போட்டி வழங்கப்பட்டது. அதில் கார்டன் ஏரியாவில் கொடிகள் நடுவதற்கு தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஹவுஸ் மேட்ஸ் தங்கள் அணியின் கொடியை நட்டு வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் இரண்டாவது சுற்று நேற்று நடைபெற்றது. அதில் 20 கொடிகள் கொடுக்கப்படும், தனித்தனியாக தங்களது அணியின் கொடியை நட்டு தங்கள் கட்சியின் ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என கூறப்பட்டது. மேலும் எதிர்க்கட்சியின் கொடிகளையும் பிடுங்கி கொள்ளலாம் என பிரச்னையை உருவாக்கும் வகையில் சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டது.

    ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கிய இந்த டாஸ்கில் ஆரம்பத்தில் கம்பங்களில் கொடியை நட ஆரம்பித்தனர். பின்னர் அபினய் கம்பங்களையே கைப்பற்றி ஒன்று சேர்த்தார். இதனால் மற்ற இரண்டு அணியினர் கடுப்பாகினர். எனவே "வாடா கம்பங்களை பிடுங்கிட்டு வரலாம்” என்று நிரூப், வருண் சென்று கம்பங்களை பிடித்து இழுத்தனர். இதனை பார்த்த தாமரை , “ஏண்டா. இப்படி அடிச்சுக்கறீங்க" என கத்தினார். அதற்கு அபினய், “யாரு ஆரம்பிச்சாங்களோ அவங்களைக் கேளு” என்றார். “என்னா சவுண்டு.. என் கிட்டேயேவா?” என்று பதிலுக்கு கத்தினார் தாமரை.

    இந்த சண்டையை பார்த்து குறுக்கிட்ட பிரியங்கா, "நேத்து அண்ணாச்சி பிடிச்சு இழுத்தப்ப.. எங்க போச்சு இந்த சவுண்டு” என கேள்வி எழுப்பினார். மேலும் "தெரில தெரிலன்னு சொல்வீங்க... நாடகம் நல்லா போடுவீங்க” என கோஷமிட்டனர். இந்த டாஸ்கில் இறுதியாக ‘உரக்கச் சொல்’ அணி வெற்றி பெற்றது.

    இதனை தொடர்ந்து நாடகம் போடறீங்க என பிரியங்கா கூறியதை தன்னுடைய தொழில் குறித்து பேசியதாக எடுத்து கொண்ட தாமரை, ராஜுவிடம் இதுகுறித்து பேசினார். அப்போது சோறு போட்ட தொழிலை இப்படி பேசுகிறார், எனக்கு நாடகம் தான் உயிர், இந்த விளையாட்டு எனக்கு தேவையில்லை என்றார். மேலும் பெத்த பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாமல் நான் நாடகத்திற்கு சென்றிருக்கிறேன். இங்கு நாடகம் போடுவதால் எனக்கு என்ன கிடைக்க போகிறது? என அழுததால் அவரை ராஜு, வருண் இருவரும் சமாதானப்படுத்தினர்.



    இந்நிலையில் இன்று இந்த பிரச்னை குறித்து பேசுவது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், தெரிகிறது. நான் சொன்னது இந்த வீட்டில் அவர் நாடகம் போடுகிறாள் என்று தான் யாருடைய தொழிலையும் கூறும் அளவிற்கு நான் சீப்பான நபர் இல்லை என பிரியங்கா பேசுகிறார். நான் நாடகம் போடுகிறேனா? உங்களிடம் நல்ல பேசும் வரை என்னை உயர்த்தி பேசினீர்கள், உங்களை எதிர்த்து நான் பேசியதால் தற்போது மட்டும் தட்டுகிறீர்கள் என்கிறார். மேலும் இந்த வீட்டின் உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும் தான் என தாமரை கூறுகிறார். அதற்கு பிரியங்கா உரக்க சொல் என கூறும் காட்சிகள் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி