• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: என்ன தண்டனை கொடுத்தாலும் பரவால... ஆனா இதை மட்டும் செய்ய மாட்டேன் - அக்‌ஷரா

Bigg Boss Tamil 5: என்ன தண்டனை கொடுத்தாலும் பரவால... ஆனா இதை மட்டும் செய்ய மாட்டேன் - அக்‌ஷரா

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் அக்‌ஷராவுக்கு இடையேயான பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, நேற்று பாடகி சின்னப்பொண்ணு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில், ’நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப் வீட்டில் உள்ள பெண்களில் யாரையாவது தனது உதவியாளராக நியமிக்க வேண்டும்’ என பிக் பாஸிடம் வந்த செய்தியை பிரியங்கா படிக்கிறார்.

    அப்போது அக்‌ஷராவின் பெயரை சொல்கிறார் நிரூப், அதற்கு, ‘எனக்கு விருப்பம் இல்ல பிக் பாஸ். இதுக்கு பதில் தண்டனை எதுவா இருந்தாலும் செய்றேன். இல்லை வீட்டை விட்டு வெளில போகணும்ன்னா பிரச்னை கிடையாது’ என்கிறார்.



    அப்போது ’பிக் பாஸின் தீபாவளி பிரச்னை அனைத்தையும் பாருங்கள், தீபாவளியை கொண்டாடுங்கள்’ என்கிறார் ராஜு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: