• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: 'ஏய் வாய மூடு’ இசைவாணியை வம்பிழுக்கும் தாமரைச்செல்வி

Bigg Boss Tamil 5: 'ஏய் வாய மூடு’ இசைவாணியை வம்பிழுக்கும் தாமரைச்செல்வி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, போட்டியாளர் மதுமிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, போட்டியாளர் மதுமிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்னும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் முடியவில்லை எனத் தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இசைவாணியின் கண்ணாடியாக தாமரை, “எனக்கு எதுவுமே புரியலைன்னு சொல்வீங்க. உனக்கு புத்தி சொல்ற அளவுக்கு எனக்கு நிறையவே புத்தி இருக்கு. அவங்க குடுத்து விட்ட கீரை, காய்கறியை சாப்பிட ஆள் இல்ல. அதைத்தான் சொல்ல வந்தேன். அப்போ நீங்க கையெடுத்து கும்பிடவும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. மொகரைய காட்ட மாட்டியா எத்தனை தடவை உன்ன அழகா காட்டிருக்கேன்” என்கிறார். அப்போது இசைவாணியின் கோபத்தை நன்றாகவே அவரது முகம் காட்டிக் கொடுக்கிறது.



    பின்னர் அனைவரும் அமர்ந்திருக்கும் போது, இசைவாணி ஏதோ சொல்ல, “ஏய் வாய மூடு. நா அந்த புள்ளைய தான் சொன்னேன்” என்கிறார் தாமரை. அப்போது “என்ன நக்கலா பாக்குற? ம்ம்ம்ம்?” எனக் கோபமாகிறார் இசை. என்ன நடந்தது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: