• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: மாறி மாறி முட்டையை தலையில் அடித்துக் கொள்ளும் தாமரை-இசை

Bigg Boss Tamil 5: மாறி மாறி முட்டையை தலையில் அடித்துக் கொள்ளும் தாமரை-இசை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோவில், 'என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, போட்டியாளர் மதுமிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், 'என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அப்போது தாமரைக்கும், இசைவாணிக்கு ஒருவர் தலையில் இன்னொருவர் மாற்றி மாற்றி முட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என பிக் பாஸ் கட்டளையிடுகிறார். இந்த டாஸ்க்கின் போது இவருக்கும் மீண்டும் கோபம் கொப்பளிக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: