ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டுக்குள் சீரியல் பிரபலங்கள் - உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டுக்குள் சீரியல் பிரபலங்கள் - உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியான ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் ஈரமான ரோஜாவே, செந்தூரப்பூவே சீரியல் குழுவினர் வருவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர். அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாகவும், நிரூப் இரண்டாவது ஃபைனலிஸ்டாகவும் தேர்வானார்கள்.

தற்போது வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில், நாடியா, சுருதி, அபிநை மற்றும் சிபி ஆகியோர் வீட்டுக்குள் மீண்டும் வந்திருந்தனர். இறுதி நாமினேஷனில் வெளியேறிய தாமரை இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதாக முதல் புரோமோவில் காட்சிகள் உள்ளன. தாமரையை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துகிறார் பிரியங்கா. மீண்டும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி என தாமரையை வரவேற்கிறார் பிக் பாஸ். தற்போது வெளியான புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் சீரியல் குழுவினர் வருவதாக காட்சிகள் உள்ளன.

ஈரமான ரோஜாவே சீஸன் 2 மற்றும் செந்தூரப்பூவே சீசன் 2 சீரியல்களின் குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று விருந்தினர்களாக வருகிறார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே, வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போதைய புரோமோவில் உள்ள காட்சிகளின் படி, வருண் மற்றும் அக்ஷரா இருவரும் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒன்றாக எலிமினேட் செய்யப்பட்ட வருண் மற்றும் அக்ஷரா மீண்டும் ஒன்றாக ஒன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இன்னும் மூன்றே நாட்களில் சீசன் முடியும் நிலையில், எலிமினேட் ஆன மீதி போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரமான ரோஜாவே சீஸன் 2 நாயகன் திரவியம், சித்தார்த் குமரன் மற்றும் இரண்டாம் நாயகியான ஷ்ராவ்னிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் வந்துள்ளனர். செந்தூரப்பூவே சீசன் 2 நாயகன் ரஞ்சித் மற்றும் நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் வந்துள்ளனர்.

ஸ்மார்ட்டா விளையாட வந்து, மனசை ஜெயிச்சிட்டு போகணும் என்று ரஞ்சித் சொல்வதாகக் காட்சிகள் உள்ளன.

பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்கள் வரும் போது, அல்லது நிகழ்வுகளின் போது, அந்நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார். ஆனால், தற்போதைய புரோமொவின் படி, ராஜு சீரியல் நடிகர்களை ஹோஸ்ட் செய்கிறார். அது மட்டுமின்றி, சீரியல் குழுவினருடன் உரையாடும் நிகழ்ச்சியில், பிரியங்கா இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், பிரியங்காவிற்கு உடல் நலம் சரியில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5