Home /News /entertainment /

Bigg Boss Tamil | இறுதி கட்டத்தில் பிக் பாஸ் டாஸ்க்... தடைகளை உடைக்கும் போட்டியாளர் யார்?

Bigg Boss Tamil | இறுதி கட்டத்தில் பிக் பாஸ் டாஸ்க்... தடைகளை உடைக்கும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு 5 கட்ட தடைகள் வழங்கப்படுகிறது. அதில் வேலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் தடைகளை தரையில் ஊர்ந்து கடக்க வேண்டும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது ராஜு, பிரியங்கா, தாமரை, நிரூப், பாவ்னி, அபிநய், அமீர், அக்ஷ்ரா, வருண், சஞ்சீவ், சிபி ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்கள் 11 பேருமே நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி நடந்த முதல் டாஸ்கில் சிபி, இரண்டாவது டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றதால் இருவரும் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகிய 9 பேருக்கும் டாஸ்குகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு டாஸ்க்கிலும் தோல்வியடையும் ஒருவர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி சஞ்சீவ், வருண், பிரியங்கா, பாவ்னி, அக்ஷ்ரா அடுத்தடுத்தது நடைபெற்ற டாஸ்குகளில் இருந்து தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டனர்.

    Also Read : ஹோட்டல் பொருட்களை காணவில்லை - மீரா மிதுன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

    இந்தநிலையில் தற்போது ராஜு, அபிநய், அமீர், தாமரை ஆகியோர் மட்டுமே உள்ள நிலையில் இவர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்படுவது இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், போட்டியாளர்களுக்கு 5 கட்ட தடைகள் வழங்கப்படுகிறது. வேலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் தடைகளை தரையில் ஊர்ந்து கடக்க வேண்டும், பஸில்களை சரியாக அமைக்க வேண்டும், சாக்கின் உள்ளே நின்றவாறு எதிர் பக்கத்தில் இருக்கும் முட்டையை எடுத்து கீழே சிந்தாமல் குடிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். இதில் அனைவரும் சிறப்பாக விளையாடுகின்றனர், இறுதியாக ராஜு முட்டையை துப்பும் காட்சிகளும் உள்ளதால் அவர் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முன்னதாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில், மாட்டு சாணம் நிறைந்த பெட்டி ஒன்றில் போட்டியாளர்கள் இறங்கி அதில் இருக்கும் நாணயங்களை சேகரிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். இந்த போட்டியில் தாமரை, அபிநய், அமீர் இருக்கும் நிலையில் ராஜு நடுவராக இருக்கிறார். மேலும் போட்டியார்கள் மூவரும் சாணத்திற்குள் கைகளை விட்டு நாணயத்தை எடுக்கின்றனர். இறுதியாக நடுவராக ராஜு, அந்த நாணயங்களை எண்ண வேண்டும் என கூறப்படுவதால், "நல்ல வேலை" என கூறிக்கொண்டே ராஜு அந்த நாணயங்களை எண்ணத்தொடங்கும் காட்சிகள் உள்ளது. எனவே ராஜு இன்று டாஸ்கில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த டாஸ்கில் யார் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து விலகுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    Also Read : பிரியங்கா இடத்தில் சிவாங்கி? விஜய் டிவி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி