• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் வீட்டிற்குள் நியூ என்ட்ரி... ப்ரியங்கா உற்சாகம்.. யார் அவர்?

பிக்பாஸ் வீட்டிற்குள் நியூ என்ட்ரி... ப்ரியங்கா உற்சாகம்.. யார் அவர்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

கடந்த 2 தினங்களாக பிக் பாஸ் வீட்டில் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது புதிய டாஸ்க் ஆரம்பமாகிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதோடு சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். தொடர்ந்து பாடகி இசைவாணி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    கடந்த 2 தினங்களாக பிக் பாஸ் வீட்டில் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது புதிய டாஸ்க் ஆரம்பமாகிறது. ‘டேய் சும்மா இருடா’ என்ற இந்த டாஸ்க்கில் என்ன நடந்தாலும், போட்டியாளர்கள் அவர்களது வேலையை செய்ய வேண்டும் எனவும், மீறுபவர்கள் நேரடியாக எவிக்‌ஷனுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.



    அப்போது திடிரென பிக்பாஸ் வீட்டின் கதவு தறிக்க வீட்டுக்குள் யாரோ வர, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கத்துகிறார் பிரியங்கா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: