Home /News /entertainment /

நாமினேஷனில் இருந்து தப்பிக்க சாணத்தில் விளையாடும் போட்டியாளர்கள்

நாமினேஷனில் இருந்து தப்பிக்க சாணத்தில் விளையாடும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மாட்டு சாணம் நிறைந்த பெட்டி ஒன்றில் போட்டியாளர்கள் இறங்கி அதில் இருக்கும் நாணயங்களை சேகரிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்கள் 11 பேருமே நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி நடந்த முதல் டாஸ்கில் ஒன்று முதல் பத்து வரை தங்களை ரேங்கிங் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் டாஸ்க் வைத்தார். அதில் சிபி வெற்றி பெற்றார். இரண்டாவதாக பேருந்து டாஸ்க் வைக்கப்பட்டது. பேருந்தில் போட்டியாளர்களுக்கு பல இடையூறுகள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றார். இதனால் நிரூப், சிபி இருவரும் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றைய நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகிய 9 பேருக்கும் டாஸ்குகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு டாஸ்க்கிலும் தோல்வியடையும் ஒருவர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி ஐஸ் கட்டிகளுக்குள் நின்று கொண்டு சூடான தண்ணீருக்குள் இருக்கும் உருளைக்கிழங்குகளை உரிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதில் வருண் தோற்றதால் டாஸ்கில் இருந்து வெளியேறினார்.

    பின்னர் போட்டியாளர்களுக்கு பலூன்கள் அடங்கிய கம்பங்கள் வழங்கப்பட்டது. இதன் பலூன்களை சக போட்டியாளர்கள் உடைக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த டாஸ்கில் முதலில் சஞ்சீவின் அனைத்து பலூன்களும் உடைக்கப்பட்டதால் அவர் வெளியேறினார். மேலும் இந்த டாஸ்கில் ராஜு - அக்ஷ்ரா இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த டாஸ்கில் ஒரு கம்பத்தில் 5 வளையங்களை போட வேண்டும் என கூறப்பட்டது. இந்த டாஸ்கில் இறுதி வரை 3 வளையங்களை மட்டும் போட்டிருந்ததால் பிரியங்கா தோல்வி அடைந்தார். நான்காவதாக ஞாபக திறனை பரிசோதிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை சில நிமிடங்கள் மட்டும் காட்டிய பின்னர் அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பாவ்னி ஒரு பாயிண்ட் கூட வாங்காததால் அவர் தோல்விடைந்து வெளியேறினார்.

    இதுவரை நடந்த 4 டாஸ்குகளில் வருண், சஞ்சீவ், பிரியங்கா மற்றும் பாவ்னி வெளியேறிய நிலையில் மீதமுள்ள ராஜு, அமீர், அபிநய், தாமரை, அக்ஷ்ரா ஆகியோருக்கு மட்டும் தாய கட்டை டாஸ்க் வழங்கப்பட்டது. தாய கட்டையில் இந்த 5 பேரின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். 3 பஸ்ஸர் அடித்த பின்பு அதில் யாருடைய முகம் மேலே இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி அனைவரும் டாஸ்கை விளையாடி ஆரம்பித்த நிலையில், ராஜூ தாயக் கட்டை மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

    அதில் அக்ஷ்ரா முகம் மேலே இருப்பதால் கடுப்பான அவர், கோபமாக சென்று விட்டார். பின்னர் ராஜூவை பார்த்து என்னுடன் பேசாதே ராஜு உன்னுடன் எப்போதும் பேச மாட்டேன் என சத்தியம் செய்து ஆங்கிலத்தில் பேசினார். இதனை பார்த்த நடுவர் பிரியங்கா தமிழில் பேசுமாறு கூறிய நிலையில், கடுப்பான அக்‌ஷரா பே என்றார். இதனால் பிரியங்கா மரியாதையாக பேசும்படி கூறியதால் இவர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அக்ஷ்ரா கோபமாக பாத்ரூம் எரியாவிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் இன்றும் இந்த பிரச்சனை தொடர்வது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், மாட்டு சாணம் நிறைந்த பெட்டி ஒன்றில் போட்டியாளர்கள் இறங்கி அதில் இருக்கும் நாணயங்களை சேகரிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். இந்த போட்டியில் தாமரை, அபிநய், அமீர் இருக்கும் நிலையில் ராஜு நடுவராக இருக்கிறார்.

    இதையும் பாருங்க - மாநாடு படத்தின் டப்பிங், ரீமேக் உரிமைகளை விற்பதில் என்ன சிக்கல்?



    எனவே ராஜு இதற்கு முன்னர் நடக்கும் டாஸ்கில் தோல்வி அடைத்திருந்திருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் போட்டியார்கள் மூவரும் சாணத்திற்குள் கைகளை விட்டு நாணயத்தை எடுக்கின்றனர். இறுதியாக நடுவராக ராஜு, அந்த நாணயங்களை எண்ண வேண்டும் என கூறப்படுவதால், "நல்ல வேலை" என கூறிக்கொண்டே ராஜு அந்த நாணயங்களை எண்ணத்தொடங்கும் காட்சிகள் உள்ளது. மேலும் தாமரை தன் மீது இருக்கும் சாணத்தை நிரூப் மீதும் தடவுகிறார். இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்று தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி