முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss Tamil 5: பணத்திற்காக தாமரையை மூளை சலவை செய்கிறாரா நிரூப்?

Bigg Boss Tamil 5: பணத்திற்காக தாமரையை மூளை சலவை செய்கிறாரா நிரூப்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இரண்டாவது ப்ரோமோவில், தாமரை மற்றும் நிரூப் பணத்தை எடுப்பது குறித்து பேசி கொண்டிருக்கின்றனர்.

  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று அதில் குறைந்த வாக்குகள் எடுப்பவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது ராஜு, அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகிய 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் அமீர், டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று பைனலிற்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், இந்த வாரம் அமீரை தவிர மீதம் உள்ள 6 பேரும் நாமினேஷனில் இருக்கின்றனர். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி கட்டத்தில் சூட்கேஸில் ஒரு பெரிய தொகை வைத்து வீட்டிற்குள் அனுப்பப்படும். தன்னால் வெற்றியாளராக முடியாது என்னும் நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். இந்த டாஸ்க் நேற்று தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சரத்குமார் சூட்கேசுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நேற்று வருகை தந்தார்.

ஒரு போட்டி என வந்துவிட்டால் வெற்றி, தோல்வி நிச்சயமாக இருக்கும். இதில் ரூ. 3,00,000 உள்ளது. இவ்வளவு தான் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம், இதற்கு அதிகமாகவும் இருக்கலாம். இதனை எடுத்து கொண்டு நீங்கள் ஒருவர் வீட்டிற்கு செல்லலாம். இந்த போட்டியில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றார்.

இந்த பணத்தை யார் எடுப்பது என நேற்றைய நிகழ்ச்சியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் ரூ. 3,00,000 பணத்தை யாரும் எடுத்து கொள்ள முன் வரவில்லை. இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், சூட்கேசில் உள்ள ரூ. 3,00,000 பணமானது ரூ. 5,00,000 என்றும் ரூ.7,00,000 என அதிகரிக்கும் காட்சிகள் உள்ளது. மேலும் ரூ.15,00,000 வைத்தால் நான் எடுத்து செல்வேன் என பாவ்னி கூறியுள்ளார்.

இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், தாமரை மற்றும் நிரூப் பணத்தை எடுப்பது குறித்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது என்ன காரணத்திற்காகவும் இந்த பணத்தை எடுத்து கொள்ள வேண்டாம், இவ்வளவு நாள் இருந்தது வீணாகிவிடும் என நிரூப் கூறுகிறார். அதற்கு தாமரை நான் ஏன்டா எடுத்து கொண்டு போக போகிறேன்? இதுவும் ஒரு டாஸ்க் தானே என நினைத்து நீ போகாமல் இரு என கூறுகிறார்.

உனக்கு தான் கடன் பிரச்சனை இருக்கிறது என கூறினாயே? என நிரூப் கேட்கும் நிலையில், அதற்கு தாமரை, நன்றாக சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது, அதனால் கோடிக்கணக்கில் பணம் வைத்தாலும் எடுக்க மாட்டேன் என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் எடுத்து கொண்டு போக வாய்ப்புகள் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் ரூ. 5,00,000 பணம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சீசனில் யாரும் எடுக்காததால் ரூ.7,00,000மாக தொகையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil 5