Home /News /entertainment /

பிக்பாஸ் : மக்கள் எனக்கு பிச்சை போட்டுருக்காங்க - அபிஷேக் ஓபன் டாக்

பிக்பாஸ் : மக்கள் எனக்கு பிச்சை போட்டுருக்காங்க - அபிஷேக் ஓபன் டாக்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர்.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர். ப்ளூ டிவி அணியில் ராஜு, அக்ஷ்ரா, தாமரை, பாவ்னி, இமான் ஆகியோரும், ரெட் டிவி அணியில் பிரியங்கா, வருண், அபிஷேக், நிரூப், சிபி ஆகியோர் இருந்தனர். இந்த போட்டியில் நடுவராக சஞ்சீவ் இருந்தார்.

    அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் டாஸ்கில் நிரூப் - இமான் இடையே இருந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் தாமரையை தகுதி இல்லை என பிரியங்கா கூறிய விஷயம், பாவ்னி தனிமையாக உணர்வதாக அடிக்கடி கூறும் விஷயம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நேற்று இறுதியாக ரெட் சேனல் நடத்தும் அபிஷேக் ராஜா, சிபி மற்றும் பிரியங்கா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக கூறி நடுவர் சஞ்சீவ் நேற்று அதிக டிஆர்பி ரேட்டிங் கொடுத்தார்.

    இதனிடையே நேற்று இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் இந்த டாஸ்க் தொடர்வது இன்றைய ப்ரோமோக்களில் உறுதியாகியுள்ளது. இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், "சுயபுத்தியை இழந்த நிரூப்" என இமான் செய்தி வாசிக்கிறார். இதுகுறித்து ராஜு கேள்வி எழுப்ப, அவர் பெரிய பிளேயர் என நம்ம அவரை கூறுகிறோம் தவிர அவர் எப்போதும் எதிராணிக்காக தான் செயல்படுகிறார் என அபிஷேக் கூறுகிறார்.

    பின்னர் நீங்கள் தனியாக விளையாடுகிறீர்களா? இல்லை கூட்டமாக விளையாடுகிறீர்களா? என இமான் கேட்கிறார். அதற்கு ராஜு, நான் தனியாக தான் விளையாடுகிறேன், ஆனால் கூட்டமாக சேர்ந்து எல்லாரும் என் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்கிறார். மேலும் எங்கு போவது என தெரியாமல், எங்கையாவது போய் சேர்ந்தால் போதும் என விளையாடுகிறேன் என கூறுகிறார். இவர்கள் அனைவரும் நிரூப்பை டார்கெட் செய்வது வெளிப்படையாக தெரிந்தது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நீ சிங்கம் என வெளியில் பில்டப் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன், நீ போறது என்றால் இப்போது கூட போடா என அபிஷேக், நிரூபிடம் கூறுகிறார். அண்ணாச்சி மனதை கஷ்டப்படுத்த கூடாது என நீ நினைத்திருந்தால் உனது நாணயத்தை அடுத்த வாரம் பயன்படுத்தியிருக்கலாமே? என கேள்வி எழுப்புகிறார்.



    மேலும் நிரூப் - பிரியங்கா என எப்போது பார்த்தாலும் பேசி கொண்டிருக்கிறார்கள், நான் இருக்கும் போதும் சரி, 60 நாட்களுக்கு பின்னர் இப்போது வரை இதை தான் பேசி கொண்டிருக்கிறார்கள் என்கிறார். மக்கள் எனக்கு பிச்சை போட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எதிர்பார்க்கும் சுவாரஸ்யத்தை என்னை கொளுத்திட்டு நான் கொடுப்பேன்டா என அபிஷேக் கோவமாக பேசும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றும் இந்த டாஸ்கில் மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி