• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: வித்தியாசமான விருதுகளால் கொளுத்தி போடும் பிக் பாஸ்!

Bigg Boss Tamil 5: வித்தியாசமான விருதுகளால் கொளுத்தி போடும் பிக் பாஸ்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த டாஸ்கில் ஒவ்வொருவரும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து விளையாடினர்

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற டாஸ்க் நேற்று நிறைவு பெற்றது. இந்த டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் வகையில் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும்.

    இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. இந்த டாஸ்கில் நேற்று இறுதியாக நிரூப் , தாமரை, ஐக்கி ஆகியோர் இருந்தனர். இதில் தாமரை அவராகவே அவுட் ஆன நிலையில் இறுதியாக ஐக்கி மற்றும் நிரூப் இந்தநிலையில், ஐக்கி - நிரூப் பொம்மையையும், நிரூப் - ஐக்கி பொம்மையையும் எடுத்து கொண்டு ஓடினார். இதில் ஐக்கி முதலில் ஓடி சென்றதால் நிரூப் வெற்றி பெற்றார். இந்த டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றதால் இந்த வாரத்திற்கான முழு லக்ஸரி மதிப்பெண்களும் அவருக்கு மட்டும் வழங்கப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

    இந்த டாஸ்கில் ஒவ்வொருவரும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து விளையாடினர். மேலும் இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்தே ஐக்கி - நிரூப் ஜோடி சேர்ந்து விளையாடி வெற்றியும் பெற்றனர். ஆனால் இதனால் பிரியங்கா பொசஸிவ் ஆனதை காண முடிந்தது. இதனை தொடர்ந்து பிக் சீசன் 5ன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த போட்டியாளர் விருது நிருப்பிற்கும், சிறந்த உடை அணிபவர் விருது அக்ஷராவிற்கும், சிறந்த பொழுதுபோக்கு நபர் விருது ராஜுவிற்கும் வழங்கப்பட்டது.

    https://twitter.com/vijaytelevision/status/1459045884063207426?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1459045884063207426%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fvijaytelevision2Fstatus2F1459045884063207426widget%3DTweet

    ஒவ்வொரு சீசனிலும் இந்த விருது வழங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் பிரச்னை ஏற்படுத்தும் விருதுகளும் இருப்பது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சி இன்றும் தொடர்வதும் அதில் பிரச்சனை ஏற்படுத்திவதும் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில் முதலில் அக்ஷ்ராவிற்கு "விஷ பாட்டில்" என்ற கிரீடம் வழங்கப்படுகிறது, அதற்கு அக்ஷ்ரா, யாருக்கும் நான் விஷமாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் தூரமாக இருந்துவிடுவேன் என்கிறார். பின்னர் இசைவாணிக்கு, "தொட்டே சிணுங்கி" என்ற கிரீடமும், "சிம்ப்ளி வேஸ்ட்" கிரீடமும் கொடுக்கப்படுகிறது. இதனால் பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கடுகிறது.

    இதனிடையே இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: