ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் தொடரும் காயின் சண்டை

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் தொடரும் காயின் சண்டை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டில் காயின் சண்டை இன்றும் தொடர்வதாகவே தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் டிவி-யின் பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

  தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

  இந்நிலையில் நாடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். நேற்றிலிருந்து பிக் பாஸ் வீட்டில் காயின் சண்டை நடைப்பெற்று வருகிறது. தனது காயினை எடுத்து விட்டதாக, சுருதியிடம் சண்டை போட்டார் தாமரைச்செல்வி. அந்த சண்டை இன்றும் தொடர்வதாகவே தெரிகிறது.

  தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’எங்களுக்கு ஒரு க்ளாரிட்டி கொடுங்க, அப்போ தான் நாங்க செஞ்சது தப்பா, ரைட்டான்னு தெரியும்’ என பாவனியும், சுருதியும் பிக் பாஸிடம் கேட்கிறார்கள். ’ராஜு நேத்து வந்ததும் கேட்ட முதல் கேள்வி, தாமரைக்கு நாங்க காயின் எடுத்துக் கொடுத்தோம், குடு அந்த காயின.... ரெண்டாவது இது காயின் எடுக்குறதுக்கான கேம் கிடையாது, மக்கள் நம்மள எப்படி பாக்குறாங்கன்றது தான்’ என சுருதி பாவனியிடம் கூறுகிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 5