• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5 - லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் நிரூப் - வருண் இடையே மோதல்!

Bigg Boss Tamil 5 - லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் நிரூப் - வருண் இடையே மோதல்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

நிரூப், இசைவாணி, பாவ்னி, வருண் ஆகியோரிடம் நாணயங்கள் இருந்ததால் அவர்களில் தலைவர் பதவி

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா , சிபி ஆகியோர் உள்ளனர். முன்னதாக இந்த வாரத்திற்கான தலைவர் பதவி டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற "செண்பகமே செண்பகமே" டாஸ்கில் வெற்றி பெற்ற நிரூப், பாவ்னி, பிரியங்கா, அக்ஷ்ரா, அபினய், மதுமிதா, வருண் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்பட்டு, கூடவே மண்பானை இணைக்கப்பட்டிருந்தது.

    இந்த டாஸ்கில் யார் தலைவராக வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்களின் பொம்மை தலையில் இருக்கும் மண் பானையை மீதம் இருக்கும் நபர்கள் உடைக்க வேண்டும் என கூறப்பட்டது. போட்டியில் இருப்பவர்கள் தாங்கள் ஏன் தலைவராக வேண்டும் என்ற கருத்தை கூறி தங்கள் பானையை உடைக்கவிடாமல் திசை திருப்பலாம் என கூறப்பட்டது. இதில் முதலில் வந்த சிபி - அக்ஷ்ராவின் பானையை உடைத்தார். இதனை தொடர்ந்து இசைவாணி - வருணின் பானையையும், ஐக்கி - பாவ்னி பானையையும், தாமரை - மதுமிதாவின் பானையையும், இமான் - பிரியங்காவின் பானையையும், ராஜு - நிரூப் பானையையும் உடைத்தனர். இதில் இறுதியாக அபினய் பானை மட்டும் யாரும் உடைக்கவில்லை, இதனால் அவர் வெற்றி பெற்றார்.

    பின்னர் நிரூப், இசைவாணி, பாவ்னி, வருண் ஆகியோரிடம் நாணயங்கள் இருந்ததால் அவர்களில் தலைவர் பதவியை மாற்றையமைக்க விருப்பமா என பிக் பாஸ் கேட்டார். இசைவாணி தான் தலைவராக விரும்புவதாக கூறவே, அபினய்-க்கு பதிலாக இந்த வாரம் இசைவாணி தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக இந்த வாரம் முழுவதும் இசைவாணி சக போட்டியாளர்களுக்கு சர்வர் வேலை பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வாரம் ஆகாயம் வாரம் என்பதால் பாவ்னி லிவிங் ஏரியாவை அதிகாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாவ்னி ஹவுஸ் மேட்ஸிற்கு எளிமையான டாஸ்குகள் கொடுத்தார்.

    இந்த நிலையில் இந்தவாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வித்தியாசமாதாக வழங்கப்படுவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற பெயரில் நடக்கும் இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்படுகிறது.

    ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும். இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த போட்டி தொடங்கியதும் தாமரை கடைசியாக வருவதாக அவரிடம் பிரியங்கா பெயர் பொம்மை இருப்பதால் பிரியங்கா வெளியேற வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். நிரூப் தடுத்ததால் தான் தன்னால் வர முடியவில்லை என தாமரை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    https://twitter.com/vijaytelevision/status/1457958710744023044?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1457958710744023044%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fvijaytelevision2Fstatus2F1457958710744023044widget%3DTweet

    இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், வருண் மற்றும் நிரூப் இடையே மோதல் ஏற்படுவது தெரிகிறது. பொம்மையை எடுப்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்படுவது தெரிகிறது. நீ நியாயமாக விளையாடுகிறாயா? அசிங்கமாக இல்லை இப்படி பொம்மையை பிடித்து இழுக்கிறாய்? என வருண் கேட்கிறார். நான் ஜாலியாக தான் விளையாடினேன், நீ இப்படி அசிங்கமாக விளையாடினால் நானும் அப்படி தான் விளையாடுவேன் என வருண் ஆக்ரோஷமாக பேசும் காட்சிகள் உள்ளது. அதற்கு நிரூப், இதனை கூற நீ யார்? என நிரூப் கேட்கிறார். இதனால் "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" டாஸ்கில் மோதல் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் ஆண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூறிய நிலையில் இந்தவாரம் அது மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: