Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: மனதை புண்படுத்திய பிரியங்கா? - வருணிடம் அழும் தாமரை

Bigg Boss Tamil 5: மனதை புண்படுத்திய பிரியங்கா? - வருணிடம் அழும் தாமரை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவிலும், பிரியங்கா - தாமரை இடையே நடக்கும் மோதல் காட்சிகள் உள்ளது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 60 நாட்களை நெருங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்தவார லக்ஸரி டாஸ்காக "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர். ப்ளூ டிவி அணியில் ராஜு, அக்ஷ்ரா, தாமரை, பாவ்னி, இமான் ஆகியோரும், ரெட் டிவி அணியில் பிரியங்கா, வருண், அபிஷேக், நிரூப், சிபி ஆகியோர் இருந்தனர். இந்த போட்டியில் நடுவராக சஞ்சீவ் இருக்கிறார்.

    கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த டாஸ்க் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்வது இன்று வெளியாகியுள்ள ப்ரோமோக்களில் தெரிகிறது. மேலும் இன்றைய மூன்று ப்ரோமோக்களிலும் தாமரை - பிரியங்கா இடையேயேயான மோதல் காட்சிகள் தான் நிறைந்திருக்கிறது.

    தாமரை குறித்து பிரியங்கா எதோ கேள்வி கேட்க சிபி அதனால் டென்ஷன் ஆகிறார். மேலும் பேப்பரை அவர் கிழித்து தூக்கி எறிந்துவிட்டு போகும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவில், நீ கேள்வி கேட்க வேண்டாம், நான் கேட்கிறேன் சிபி என கூறும் பிரியங்கா, செல்ல புள்ள தங்க புள்ள என உன்னை தாமரை கொஞ்சுவதால் தாமரையிடம் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது என்கிறார்.

    அப்போது குறுக்கிடும் தாமரை, நான் பாசமாக செல்ல புள்ள தங்க புள்ள என்று கூறுவதை ஏன் நீ கலாய்கிறாய்? நீ முதலில் நியாயமாக நட என பிரியங்காவிடம் கோபமாக கூறுகிறார். அதற்கு பிரியங்கா உன் உண்மையான முகம் வெளிவந்துவிட்டது என கூறும் காட்சிகள் இருந்தது.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவிலும், பிரியங்கா - தாமரை இடையே நடக்கும் மோதல் காட்சிகள் உள்ளது. அதில் பிரியங்காவை பார்த்து, கத்தியை எடுத்து குத்திவிட்டு அது டாஸ்க் என்று கூறுவாயா? என்றும் என் மனதை பாதிக்கும் வகையில் பேச வேண்டும் என முடிவு செய்து பேச வந்திருக்கிறாய் என்பது எனக்கு தெரிகிறது என்றும் தாமரை கூறுகிறார். பின்னர் அவளுக்கு என வரும்போது வேறுமாதிரி அதனை பார்க்கிறார், இன்னொருத்தருக்கு வரும்போது அவ வச்சு செய்வாள் என்றால் எனக்கு அது புரியவில்லை என பிரியங்கா பேசி கொண்டிருக்கிறார்.



    மேலும் படிக்க - 'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ - வலிமை செகண்ட் சிங்கிள்!

    மறுபுறம் வருணிடம் பேசி கொண்டிருக்கும் தாமரை, பிரியங்கா மீது ஆயிரம் குற்றங்கள் உள்ளது, அவர் ஏன் அடுத்தவரை இப்படி செய்கிறார்? என்னை கடுப்பேத்தி அப்படி ஏன் விளையாடுகிறார்? என அழுதுகொண்டே கூறும் காட்சிகள் உள்ளது. இவை அனைத்தையும் டாஸ்கின் நடுவரான சஞ்சீவ் கவனித்து கொண்டிருக்கிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சி காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி