Home /News /entertainment /

தாமரையின் உண்மையான குணத்தை காட்ட துடிக்கும் பிரியங்கா

தாமரையின் உண்மையான குணத்தை காட்ட துடிக்கும் பிரியங்கா

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே பிரச்னை வெடிக்கும் எனத் தெரிகிறது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 60 நாட்களை நெருங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்தவார லக்ஸரி டாஸ்காக "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர். ப்ளூ டிவி அணியில் ராஜு, அக்ஷ்ரா, தாமரை, பாவ்னி, இமான் ஆகியோரும், ரெட் டிவி அணியில் பிரியங்கா, வருண், அபிஷேக், நிரூப், சிபி ஆகியோர் இருந்தனர். இந்த போட்டியில் நடுவராக சஞ்சீவ் இருக்கிறார். முதல் நாள் நடைபெற்ற இந்த டாஸ்கில் ரெட் சேனல் நடத்தும் அபிஷேக் ராஜா, சிபி மற்றும் பிரியங்கா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக கூறி நடுவர் சஞ்சீவ் நேற்று அதிக டிஆர்பி ரேட்டிங் கொடுத்தார்.

    நேற்று நடைபெற்ற இந்த டாஸ்கில் சிபி - அக்ஷ்ரா இடையேயான பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது “நான் பார்க்கறதுக்கு சைலன்ட்டா இருப்பேன். தேவைப்பட்டா வயலன்ட்டா மாறுவேன். நானும் அக்ஷரா மாதிரி கூட்டுக்குள் வாழ்ந்த பறவை. ரெண்டு பேரும் செல்லமா வளர்ந்திருக்கோம்போல. ஆனா நான் வெளிநாடு பறந்து திரிஞ்சு உலகத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். அக்ஷரா இன்னமும் கூட்டுக்குள்ளயே இருக்காங்க. இப்பத்தான் பிக்பாஸ்-ன்ற உலகத்தைப் பார்க்க வந்திருக்காங்க” என்று சிபி சொல்ல “அவன் வலது ஓரத்துல உக்காந்திருப்பான். நான் இடது ஓரத்துல உக்காந்திருப்பேன். இப்படி ஓரம்... ஓரமா நாங்க உக்காந்தாலும் அப்பப்ப காரமா சண்டை போடறது மட்டும் எப்படியோ நடந்துடுது” என்று சிரித்தபடியே பேசினார் அக்ஷரா.

    பின்னர் அமீர் - பாவ்னி இடையேயான நட்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ப்ளூ சேனல் நடத்தும் இமான், "சுயம்வரம் தேடி வந்து சுயபுத்தியை இழந்த நிரூப்” என தொடங்கினார். இதனை தொடர்ந்து நிரூபிடம் சில கேள்விகள் கேட்ட நிலையில் அதற்கு அவர் பதிலளித்தார். இறுதியாக ப்ளு சேனல் 11 மதிப்பெண், சிவப்பு சேனல் 14 மதிப்பெண் என சஞ்சீவ் அறிவித்தார்.

    இந்தநிலையில் மூன்றாவது நாளாக இந்த டாஸ்க் இன்றும் தொடர்வது இன்று வெளியாகியுள்ள ப்ரோமோக்களில் தெரிகிறது. இன்றைய முதல் ப்ரோமோவில், தாமரை குறித்து பிரியங்கா எதோ கேள்வி கேட்க சிபி அதனால் டென்ஷன் ஆகிறார். அப்போது அபிஷேக் இடைவேளை விடுவதாக அறிவிக்க, எல்லா நேரமும் அப்படி விட முடியாது என கூறி கோபமான வெளியேறுகிறார். மேலும் பேப்பரை அவர் கிழித்து தூக்கி எறிந்துவிட்டு போகிறார். இதனை தொடர்ந்து பிரியங்கா, வருண், சிபி, அபிஷேக் என எல்லோரும் சண்டை போட்டுக்கொண்டிருக்க டாஸ்கின் நடுவர் சஞ்சீவ் அமைதியாக இருக்குமாறு கத்துகிறார். அதை கேட்டு மற்றவர்கள் அதிர்ச்சியாகி நிற்கும் காட்சிகள் இருந்தது.



    தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், நீ கேள்வி கேட்க வேண்டாம், நான் கேட்கிறேன் சிபி என கூறும் பிரியங்கா, செல்ல புள்ள தங்க புள்ள என உன்னை தாமரை கொஞ்சுவதால் தாமரையிடம் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது என்கிறார். அப்போது குறுக்கிடும் தாமரை, நான் பாசமாக செல்ல புள்ள தங்க புள்ள என்று கூறுவதை ஏன் நீ கலாய்கிறாய்? நீ முதலில் நியாயமாக நட என பிரியங்காவிடம் கோபமாக கூறுகிறார். அதற்கு பிரியங்கா உன் உண்மையான முகம் வெளிவந்துவிட்டது என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி காரசாரமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி