ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நாடகம் ஆடுவது யார்? பிரியங்காவின் முழக்கத்தால் அழும் தாமரை!

நாடகம் ஆடுவது யார்? பிரியங்காவின் முழக்கத்தால் அழும் தாமரை!

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் தாமரை

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், "தெரியல தெரியலன்னு சொல்றீங்க.... நாடகம் நல்ல போடுறீங்க" என தாமரையை கூறுகிறார் பிரியங்கா.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி, அபிஷேக் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் தாமரை, சிபி, அபினய், நிரூப், அக்ஷ்ரா, அமீர், இமான் ஆகியோர் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்குகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாகவும் பிரிந்தனர்.

மேலும் அரசியல்வாதிகள் போல ஆண்கள் வெள்ளை சட்டை, வேஷ்டியிலும், பெண்கள் அனைவரும் சேலை அணிந்தும் இருந்தனர். சிபி அணியினர் 'பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகம்’ BBMK’ என்றும் சஞ்சீவ் அணியினர் "NPP” கட்சி என்றும், பிரியங்கா அணியினர் ‘உரக்க சொல்’ என்றும் தங்களது கட்சிகளுக்கு பெயரிட்டுள்ளனர். பின்னர் "வெற்றிக்கொடி கட்டு" என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் கார்டன் ஏரியாவில் கொடிகள் நடுவதற்கு இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தது. எந்த இரண்டு நபர்கள் தங்கள் கட்சிக்கான இரண்டு கொடிகளை நடுகிறார்களோ அவர்களது அணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் எந்த அணி அதிக மதிப்பெண்கள் வாங்குகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என கூறப்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த டாஸ்கில் சிபி, சஞ்சீவ் அணியினர் 6 மதிப்பெண்களும், பிரியங்கா அணியினர் 4 மதிப்பெண்களும் எடுத்திருந்தனர். மேலும் இந்த டாஸ்கின் இறுதி சுற்றில் தாமரை, பாவனி, இமான் ஆகிய மூவரும் மோதிய ஒரு ஆட்டத்தில் தாமரை - இமான் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்தநிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடர்வது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், "வெற்றிக்கொடி கட்டு" டாஸ்க்கின் இரண்டாவது சுற்று நடைபெறுகிறது. இதில் 20 கொடிகள் கொடுக்கப்படும், தனித்தனியாக தங்களது அணியின் கொடியை நட்டு தங்கள் கட்சியின் ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என கூறப்படுகிறது. இதில் அபினய் - தாமரை இடையே பிரச்னை நடக்கிறது. இருவரும் சண்டை போடும் நிலையில், அமீர், அபினய்யை சமாதானப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், "தெரியல தெரியலன்னு சொல்றீங்க.... நாடகம் நல்ல போடுறீங்க" என பிரியங்கா கூறுகிறார். இதனை தனது தொழிலை பற்றி கூறுவதாக நினைத்துக்கொள்ளும் தாமரை, இதுகுறித்து ராஜுவிடம் பேசுகிறார். அதற்கு ராஜு, உனக்கு கோவத்தை வரவைக்க இப்படி பேசுகிறார் என்கிறார். அதற்கு தாமரை சோறு போட்ட தொழிலை இப்படி பேசுகிறார், எனக்கு நாடகம் தான் உயிர், இந்த விளையாட்டு எனக்கு தேவையில்லை என கூறுகிறார்.

அதோடு பெத்த பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாமல் நான் நாடகத்திற்கு சென்றிருக்கிறேன். இங்கு நாடகம் போடுவதால் எனக்கு என்ன கிடைக்க போகிறது? என கூறி அழுகிறார். மறுபுறம் இதுகுறித்து விளக்கும் பிரியங்கா, அவளுக்குள் எல்லாமே தெரியும், "தெரியல தெரியல சொல்றீங்க.... நாடகம் நல்ல போடுறீங்க" என்பது எங்களது முழக்கம் என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்புடன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5