Home /News /entertainment /

Bigg Boss Tamil 5 | தாமரையால் ரணகளமாகும் பிக் பாஸ் வீடு

Bigg Boss Tamil 5 | தாமரையால் ரணகளமாகும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இன்று பிக் பாஸ் வீட்டில் "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 8 வாரங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

    நேற்று திங்கட்கிழமை என்பதால், பிக் பாஸ் வீட்டில் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த போட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற ஸ்கூல் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட சிபி , அபிஷேக், இமான் அண்ணாச்சி 3 பேர் போட்டியிட்டனர். "கோபுரங்கள் சாய்வதில்லை" என்ற பெயரில் நடைபெற்ற அந்த டாஸ்கில் கொடுக்கப்பட்ட சிறிய பெட்டிகளை உயரமாக அடுக்க வேண்டும். யார் தலைவராக விருப்பம் இல்லையோ அவரை உயரமாக அடுக்க முடியாத படி மற்ற போட்டியாளர்கள் பந்துகளை எரிந்து தடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

    இந்த டாஸ்கில் இமான் வெற்றி பெற்றார். ஆனால் நாணயம் வைத்திருப்பவர்களுக்கு தலைவரை மாற்றும் சலுகைக்கான வாய்ப்பளிக்கப்படுகிறது என பிக் பாஸ் கூற, நிலத்தின் நாணயத்தை வைத்து இருக்கும் நிரூப், அந்த நாணயத்தை பயன்படுத்தி அண்ணாச்சியின் தலைவர் பதவியை தட்டிப்பறித்து பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆனார். மேலும் தலைவர் பதவியை தட்டிப்பறித்ததற்காக பிக் பாஸ், நிரூப்பிற்கு வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார்.

    அதில், இந்த வாரம் முழுவதும் நிரூப் யாரிடம் பேசினாலும், அவர்களின் உயரத்திற்கு கீழே குனிந்து அவர்களின் கண்களை பார்த்து பேச வேண்டும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து நிரூப் கூறியதை கேட்க மறுத்ததால் இமான் - நிரூப் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் நாமினேஷன் நடைபெற்றது. இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்படுவது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிகிறது. அதன்படி ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுவதாக பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது. "சிங்கத்தின் பிடரியில் ஊஞ்சலாடிய இமான்", "பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவின் பரிதாபங்கள்" என செய்தி வாசிக்கப்படுகிறது.

    அப்போது, பிரியங்கா “எனக்கு இப்போ தான் புரிஞ்சது யார் யாரை இந்த வீட்ல நம்பணும், யார் யாரை நம்பக் கூடாதுன்னு” என்று கூறுகிறார். பின்னர் பிரியங்காவையும், தாமரையையும் உட்கார வைத்து, ’இவங்க என்ன மாதிரியான ஃப்ரெண்ட் உங்களுக்கு’ என்று கேள்வி எழுப்ப, ‘எனக்கு ஃப்ரெண்டே கிடையாது. நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்திருக்கணும், மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான்னு நினைக்கிறது பிரியங்கா தான். நான் எங்க வேணும்னாலும் சொல்வேன்” என தாமரை அதிரடியாக கூறும் காட்சிகள் இருந்தது.



    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், "இந்த வீட்டில் சில பேர் ஒன்னு பண்ணுறாங்க, அதுக்கப்புறம் பின்னாடி ஒன்று பேசுகிறார்கள்" என பிரியங்கா கூறுகிறார். நீ சிண்டு முடிந்துவிடும், வேலையை நன்கு செய்கிறாய் என தாமரை, பிரியங்காவை கூறுகிறார். பின்னர் பாவ்னியிடம், உன் பேச்சை நான் தட்டி பேசினால் நீ என்னை மட்டம் தட்டி பேசுவியா? நான் நியாயமாக தானே பேசினேன் என கோபமாக பேசும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த டாஸ்கில் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி