Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: ராஜுவை சீண்டிய பிரியங்கா... தீவிரமாகும் வாக்குவாதம்

Bigg Boss Tamil 5: ராஜுவை சீண்டிய பிரியங்கா... தீவிரமாகும் வாக்குவாதம்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராஜுவுக்கும், பிரியங்காவிற்கும் வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘என்னைய நீங்க சைலண்ட் கேம் ஆடுறேன்னு சொன்னீங்க, என்னென்ன எல்லாம் ஆடுனேன்’ என ராஜு கேட்க, ’தேவையான மக்களுக்கு மட்டும் தான் நீங்க குரல் கொடுக்குறீங்க’ என்கிறார் பிரியங்கா. அதற்கு, ‘என் கண் முன்னாடி நடக்குறத பத்தி பேசக் கூடாதா’ என ராஜு கேட்க, ‘கண்ணு முன்னாடி நடக்குறத பத்தி பேசலாம், பப்ளிக்கா பேசக் கூடாது’ என்கிறார் பிரியங்கா. இதற்கு பதிலளிக்கும் ராஜு, ‘அப்போ பிரைவேட்டா ஒரு இடம் சொல்லுங்க’ என்கிறார். இந்த வாக்குவாதம் ராஜுவுக்கும், பிரியங்காவிற்கும் தீவிரமாகும் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி