ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil | அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படுகிறாரா பிரியங்கா? நிரூப் அதிரடி குற்றச்சாட்டு!

Bigg Boss Tamil | அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படுகிறாரா பிரியங்கா? நிரூப் அதிரடி குற்றச்சாட்டு!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் - பிரியங்கா இடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெறுகிறது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 78 நாட்களை நிறைத்து செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை, நமீதா மாரிமுத்து , நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று அபிநய் வெளியேற்றப்பட்டுளார்.

இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் போல வாரம் முழுவதும் நடந்த பிரச்சனைகள் குறித்து கமல் விவாதித்தார். அதில் அக்ஷ்ரா - பிரியங்கா இடையே உள்ள பிரச்சனை குறித்து பேசினார். அப்போது, இன்னும் 4 வாரங்களே இருக்கிறது, பிரியங்கா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு அக்ஷ்ரா, தேவைப்படாத நேரத்தில் கூட அனைத்து விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார்.

Also Read : குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளித்த கனடா வாழ் விஜய் ரசிகர்கள்!

அதாவது நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்பது போல இருக்கிறார் என என்றார். இதனை கேட்டு பிரியங்கா தன்னை மாற்றிக்கொள்வதாக கூறினார். பின்னர் ராஜு குறித்து பேசிய கமல், தான் நெய்த நகைச்சுவை போர்வையை ராஜூ போர்த்திக் கொண்டிருக்கிறார். தன் கோபத்தை அவர் கட்டுக்குள் வைத்திருப்பது ஒருவகையில் பாராட்டத்தக்கது என கூறினார். மேலும் டாஸ்குகளில் மற்றவர்களுக்கு விட்டு கொடுக்காமல் சிறப்பாக விளையாடுமாறு அறிவுறுத்தினார்.

சனிக்கிழமை முதல் நபராக ராஜு காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த ரேங்கிங் டாஸ்க் குறித்து விவாதித்தார். அதில் சிபி, முதலிடம் பிடித்தது குறித்து பாராட்டிய நிலையில் நிரூப் மற்றும் தாமரை ஏன் கடைசி இடத்தில் நின்றனர் என கேள்வி எழுப்பினார். பின்னர் நடிகர் ஆதி நடித்துள்ள திரைப்படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. அப்போது ஹவுஸ் மேட்ஸிடம் பேசிய ஆதி, பிரியங்கா காப்பாற்றப்பதாக அறிவித்தார். தொடர்ந்து பாவ்னி, அக்ஷ்ரா, வருண் காப்பாற்றப்பட்ட நிலையில் இறுதியாக அபிநய் வெளியேற்றப்பட்டார்.

Also Read : பனாமா பேப்பர்ஸ் வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் ’உட்ராதீங்க எப்போவ்’ டாஸ்க் வழங்கப்படுகிறது. அதன்படி கொடுக்கப்பட்ட கயிறை கடைசி வரை விடாமல் பிடித்திருப்பவரே இந்த வார தலைவர் என அறிவிக்கிறார் பிக் பாஸ். இரவு பகலாக தொடரும் இந்த டாஸ்கில் அனைவரும் கயிற்றை பிடித்து கொண்டே தூங்குகின்றனர். பின்னர் மறுநாள் காலை வரை கயிற்றைபிடித்து கொண்டே இருக்கும் நிலையில், ராஜு கயிறை விட்டு விட்டு எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது. இறுதியில் பிரியங்கா... ஏய் என நிரூப் கூப்பிட, ‘ஏய் கீய்ன்னு எல்லாம் கூப்பிடாத, பேர் இருக்கு, பிரியங்கான்னு கூப்பிடு’ என பிரியங்கா கோபமாக கூறும் காட்சிகள் உள்ளது.

இதையும் படிங்க - இந்தியின் பிரமாண்ட படத்தை தமிழகத்தில் வெளியிடும் ராஜமௌலி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் - பிரியங்கா இடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில், நீ அனைத்து பிரச்னை நடக்கும் போதும் சரியோ... தவறோ.. உன் வாய்ஸ் இருக்க வேண்டும் என பேசுகிறாய் நான் ஒரு முறையாவது தலைவர் பதவியை ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறேன் என நான் கூறுவது உனக்கு கேட்கவில்லையா? இது எங்கள் மூவருக்கும் இடையிலான பிரச்சனை என நிரூப் கத்துகிறார். அதற்கு பிரியங்கா, நான் அவளிடம் பேசுகிறேன், உனக்கு என்னடா பிரச்சனை? எனக் கேட்கிறார். இதனை கேட்ட நிரூப், நீ ஒரு செல்பிஷ், ஈவில், அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படும் ஒரே நபர் நீ தான் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று தலைவர் போட்டியில் பிரச்சனை ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5