முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நீ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததே வேஸ்ட்... பிரியங்காவை சீண்டும் நிரூப்!

நீ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததே வேஸ்ட்... பிரியங்காவை சீண்டும் நிரூப்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷனில் பிரியங்கா - நிரூப் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று அதில் குறைந்த வாக்குகள் எடுப்பவர் வெளியேறுவார். அதன்படி நேற்று வெளியேறிய சஞ்சீவை சேர்த்து இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் திங்கட்கிழமை நாமினேஷன் நடப்பதால் பரபரப்பாக இருக்கும். அதிலும் இந்த சீசனின் இறுதி நாமினேஷன் வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது. அடுத்த வாரம் சீசனின் ஃபைனல்ஸ் என்பதாலும், இது தான் கடைசி நாமினேஷன் என்பதாலும், யாரெல்லாம் நாமினேட் ஆகிறார்கள் மற்றும் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இன்று போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்கிறார்களோ அவர்கள் கழுத்தில் மாலை அணிவித்து நாமினேட் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று நேரடி நாமினேஷனை பிக் பாஸ் அறிவித்திருக்கும் காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷனில் பிரியங்கா - நிரூப் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு வாழ்க்கை இருக்கிறது என பிரியங்கா கூறுகிறார். அதற்கு நிரூப், அந்த வாழ்க்கைக்காக தான் நீ தற்போது நடிப்பதாக எனக்கு தோன்றுகிறது. நீ என்ன செய்தாலும் அது எனக்கு வியூகமாக தோன்றுகிறது என்கிறார். அதற்கு பிரியங்கா நீ மட்டும் தான் அப்படி யோசிக்கிறாய் என கூற, அப்போ நீ இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே வேஸ்ட் என நிரூப் கூறும் காட்சிகள் உள்ளது. பிரியங்கா மற்றும் நிரூப் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது.

இதையும் படிங்க - ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போனதற்கு முதல்வரின் முடிவு காரணமா?

முன்னதாக இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கடந்த வாரம் நடந்த பலூன் டாஸ்க் குறித்து தாமரை - அமீர் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனால் இன்று யாரெல்லாம் நாமினேஷனில் இருப்பார்கள் என்ற எதிர்பார்புகள் அதிகரித்துள்ளது. மேலும் கடைசி வாரம் என்பதால் அமீரை தவிர அனைவரும் நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5