• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil 5: போடா டேய் என ராஜூவை திட்டும் பாவனி - என்ன காரணம்?

Bigg Boss Tamil 5: போடா டேய் என ராஜூவை திட்டும் பாவனி - என்ன காரணம்?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 44 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

  இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என அடுத்தடுத்து வெளியேறினர். தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ஐக்கி, அக்ஷ்ரா, நிரூப், சிபி, அபினய், இமான், தாமரை, இசைவாணி, பாவ்னி ஆகிய 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

  இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி சிபி- அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி - இமான், பாவ்னி - ராஜு , பிரியங்கா - தாமரை, ஐக்கி - வருண், நிரூப் - அபினய் கண்ணாடியாகவும் பிரியுமாறு அறிவிக்கப்பட்டது.

  அதன்படி ஒவ்வொருவரும் தங்களது டீம் நபர் போல பேச்சு, நடை, உடை, பாவனை என பின்னி பெடலெடுத்தனர். ஆனால் இந்த டாஸ்கில் அபினய் - நிரூப் இடையே பிரச்னை ஏற்பட்டது. அபினய் முடி வெட்டியதால் நிரூப்பும் வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் ஒரு சிறிய பகுதியை தான் இருவரும் ட்ரிம் செய்து கொண்டனர். ஆனால் கேன்சர் நோய்களிகளுக்காக நான் முடி வளர்ப்பது தெரிந்தும் அதனை அபினய் வெட்ட சொல்லியதாக நிரூப் கடுப்பானார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

  இதனை தொடர்ந்து லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் டாஸ்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முதலில் அபினய் - நிரூப் ஜோடி சென்றனர். அப்போது அபினய் குறித்து பேசிய நிரூப், பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனால் கண்ணீர் வீட்டு அழுதார் அபினவ். இதனை தொடர்ந்து இசைவாணி - இமான் குறித்து பேசினார்.

  இந்த நிலையில் இன்றும் ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க்’ இன்றும் தொடர்கிறது முதல் ப்ரோமோவில் தெரிந்தது. அதில், நேற்றிருந்த ஜோடிகள் அனைத்தும் இன்று மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். மேலும் இதில் பிரியங்கா குறித்த கருத்துக்களை ராஜு கூறுகிறார். அப்போது, பாவ்னி உங்களை ஏத்தி விடுகிறார், நீங்கள் அமைதியாக இருங்கள் என ராஜு கூறுகிறார்.  இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என என்னிடம் தெளிவாக கூறுங்கள் என ராஜுவிடம், பாவ்னி கூறுகிறார். மேலும் நீங்கள் மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை திணிப்பதாகவும் கூறுகிறார். விருது வழங்கும் டாஸ்கின் போது கூட அனைவர் குறித்தும் நல்ல விதமாக கூறுகிறீர்கள், ஆனால் என்னை பற்றி மட்டும் குறை கூறுகிறீர்கள் என்றும் பாவ்னி கூறுகிறார். அதற்கு ராஜு, உன்னிடம் ஜாலியாக பேசுவதே தப்பு, இதற்கு தான் நான் உங்களை விட்டு தூரமாக இருக்கிறேன் என்கிறார். அதற்கு பாவ்னி டேய்... போடா டேய் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ என பாவ்னி கூறும் காட்சிகள் உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: