• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 'உன்கிட்ட புரிதல் குறைவா இருக்கு' -  பிரியங்கா அண்ணாச்சி மோதல்

'உன்கிட்ட புரிதல் குறைவா இருக்கு' -  பிரியங்கா அண்ணாச்சி மோதல்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

யாரைத் தலைவராக தேர்ந்தெடுத்தால் வீடு விளங்காது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று இமான் அண்ணாச்சி பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் கூறினார்.

 • Share this:
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கட்கிழமை என்றாலே பரபரப்பாக இருக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது தலைவர் போட்டி நடக்கும், இரண்டாவது நாமினேஷன். இந்த வாரம், யார் தலைவராக கூடாது என்பதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் வித்தியாசமான தலைவர் போட்டியை அறிவித்துள்ளார்.

  யாரைத் தலைவராக தேர்ந்தெடுத்தால் வீடு விளங்காது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று இமான் அண்ணாச்சி முதல் புரோமோவில் கூறினார். தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில் பிரியங்காவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் ஏற்பட்டு உள்ளன.

  இந்த வாரத்தின் தலைவர் போட்டியில் தலைவர் பதவிக்காக பிரியங்கா மற்றும் நிரூப் காரசாரமாக மோதிக்கொண்ட உள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறை இவ்வாறு போட்டி என்று வரும்போது நிரூப் மற்றும் பிரியங்கா இருவருமே காரசாரமாக சண்டை போட்டுக் கொள்கின்றனர். போட்டி முடிந்த உடன், இருவரும் சிரித்து பேசி நட்பாக இருப்பது ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது.

  தற்போதைய புரோமோவின் படி, பிரியங்கா, சிபி, ஐக்கி மற்றும் நிரூப் ஆகிய நால்வரும் தலைவர் போட்டி டாஸ்க்கில் போட்டியிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

  இந்த வார இறுதி எபிசோடுகளில், நிரூப் அண்ணாச்சியின் கைப்பாவையாக, அண்ணாச்சி சொல்வதை எல்லாம் செய்பவராக மாறிவருகிறார் என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். அதை நிரூப் மறுத்தார்.

  தலைவர் போட்டியில் அதையே மறுபடியும் விளக்கினார் நிரூப். “நான் உங்க கைப்பாவை ஆயிடுவேன். நீங்க என்ன கண்ட்ரோல் பண்ணிடுவீங்க அப்படின்னு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்களும் அப்படி நினைச்சதில்ல. நானும் அப்டி நினைச்சது கிடையாது.” என்று இமான் அண்ணாச்சி தண்ணீர் ஊற்ற வரும் போது, நிரூப் விளக்கிக் கொண்டிருந்தார்.

  “அதுக்குத் தான் நான் அவர லாஸ்டா வர சொன்னேன்” என்று பிரியங்கா பதில் கொடுத்தார்.

  இதனால் கடுப்பான அண்ணாச்சி. “இந்த புரிதல் பிரியங்கா கிட்ட உண்மையிலேயே குறைவா தான் இருக்கு” என்று தண்ணீரை பிரியங்காவின் பாட்டிலில் ஊற்றி விட்டார். இதை எதிர்பார்க்காத பிரியங்கா தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

  கடுப்பான பிரியங்கா “தேங்க்யூ அண்ணாச்சி! உங்க வார்த்தைய நீங்க எப்படி மாத்துவீங்கன்றது தெரிஞ்சி போச்சு. இனிமே சத்தியமா நான் உங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர்பார்க்க மாட்டேன்” என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகக் கூறினார்.

  ஏற்கனவே பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் இவர்கள் நட்பாக இருக்கிறார்களா அல்லது போலியான சண்டை போடுவது போல் நடிக்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, நிரூப், பிரியங்காவை நன்றாக பயன்படுத்துகிறார் என்றும் இதில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஆனால் ப்ரியங்கா அதை நம்புகிறாரா என்பதும் சரியாகத் தெரியவில்லை. இந்நிலையில் இன்றைய தலைவர் போட்டியில் மீண்டும் இவர்கள் சண்டை போட்டது அனைவரையும் குழப்பமடைய தன் செய்திருக்கிறது.அதே போல அண்ணாச்சி மற்றும் பிரியங்கா மோதல் கடுமையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோரைத் தொடர்ந்து, நேற்றைய எலிமினேஷனில் ஜெர்மனியைச் சேர்ந்த மதுமிதா வெளியேறினார். இந்த வாரம் தலைவர் யார் மற்றும் நாமினேஷன் பட்டியலில் யார் வரப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: