• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் : என் கண்ணு முன்னாடி வராத... சிபியிடம் கத்திய அக்‌ஷரா!

பிக்பாஸ் : என் கண்ணு முன்னாடி வராத... சிபியிடம் கத்திய அக்‌ஷரா!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

சிபியை பார்த்தவுடன் மிகுந்த ஆத்திரமடைந்த அக்ஷரா "நீ பேசாத என்னிடம்.. கடுப்பாகிவிடுவேன், என் கண்ணு முன்னாடி வராத" என்று கத்துகிறார்.

  • Share this:
    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 51-ம் நாளான நேற்று ஒளிபரப்பான எபிசோடில் வைல்ட் கார்டு போட்டியாளராக கோரியோக்ராபர் அமீர் வீட்டில் நுழைந்தார். அதேபோல, பிக் பாஸ் வீட்டில் நேற்று முதல் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபி மிக ஸ்ட்ரிக்ட்டான வார்டனாக செயல்படுகிறார். அவரை தவிர ராஜு, அபிஷேக், அமீர் ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர். சிபி மாணவர்களாக இருக்கும் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான பனிஷ்மெண்டுகளை வழங்கி வருகிறார். அதனை கொஞ்சம் கூட மதிக்காத மாணவியாக பிரியங்கா நடந்துகொள்ள, அவரை வீட்டிற்கு வெளியே அனுப்பி விடுகிறார் சிபி.

    இந்த நிலையில் 52ம் நாளான இன்று முதல் ப்ரோமோ வெளியானது. அதில், சிபியால் அக்ஷரா மிக கடுமையாக கோபத்திற்கு ஆளாகிறார். அக்ஷரா தனது பள்ளி சீரூடையை தேய்க்க சிபியிடம் அனுமதி கேட்கிறார். சிபி எதுவாக இருந்தாலும் சீக்கிரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். உடனே கடுப்பான அக்ஷரா "எப்படி இந்த வேலையை சீக்கிரம் முடிப்பது.. மண்டை மேல உட்கார்ந்துகிட்டு சொன்னா ஏதும் செய்ய முடியாது எனக் கூறுகிறார். உடனே சிபி நீங்க ஸ்டீமிங் செய்ய வேண்டாம் என தடுக்க, அக்ஷராவும் என்னால் எதுவுமே செய்ய முடியாது.. நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க என்று கோபமாக சொல்லிவிட்டு பாத்ரூம் செல்கிறார். மேலும் பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பூதொட்டியை வேகமாக தள்ளிவிட்டு செல்கிறார்.

    இதனை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள 2-வது ப்ரோமோவும் முதல் ப்ரோமோவின் தொடர்ச்சியாகவே உள்ளது. அதில் கோபமாக ரூமுக்கு சென்ற அக்ஷராவிடம், "முடியாது என்றால் சொல்லிவிடு. எதற்கு முடியும் என்று சொல்லிவிட்டு பண்ணாம இருக்கிறாய்?” என அபி கேட்கிறார். அதற்கு அக்ஷரா, "நான் எங்க முடியும் என்று சொன்னேன். அறிவுன்றது இருக்கா.. இல்லையா.. " என மிக கோவமாக கேட்கிறார். உடனே அந்த இடத்திற்கு சிபியும், ராஜுவும் வருகின்றனர். சிபியை பார்த்தவுடன் மிகுந்த ஆத்திரமடைந்த அக்ஷரா " நீ பேசாத என்னிடம்.. கடுப்பாகிவிடுவேன். என் கண்ணு முன்னாடி வராத" என்று கத்துகிறார். உடனே சிபி பின்வாங்க ராஜு அக்ஷராவிடம் பேச முயற்சிக்கிறார்.



    அப்போதும் மிகுந்த கோபத்துடன் " ராஜு நீ போய்விடு" என அக்ஷரா கூறுகிறார். உடனே சிபியும் ராஜூவை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆனால் அக்ஷராவிடம் பேச்சு கொடுக்கும் ராஜூவை பார்த்து " ஓவரா பண்ணாதீங்க, போதும்" என்கிறார். ராஜுவும் பதிலுக்கு யாரு ஓவராக பண்ணீட்டு இருக்கா? என்று கேட்க நீயும், சிபியும் தான் என அக்ஷரா மிக கோபமாக பதிலளிக்கிறார். உடனே பிக்பாஸ் அக்ஷராவை கன்பெஷன் ரூமுக்கு அழைக்கிறார். அக்ஷராவும் கோபத்துடன் அழுதுகொண்டே செல்வது போல ப்ரோமோ காட்சிகள் அமைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: