Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் எழுந்த சாப்பாட்டு சண்டை

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் வீட்டில் எழுந்த சாப்பாட்டு சண்டை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோவில், பிரியங்கா பாட்டு பாடி தங்களது கட்சிக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

    இதற்கிடையே அபிஷேக், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் கொரோனோவிலிருந்து குணமடைந்த கமல், மீண்டும் பிக் பாஸ் செட்டுக்கு திரும்பினார். இதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்று கிழமை, அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிரியங்கா பாட்டு பாடி தங்களது கட்சிக்கு வாக்கு சேகரிக்கிறார். அப்போது பாடுவதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது போல அந்த கட்சிக்கு என்கிறார் நிரூப். அதற்கு முதுகுல குத்துறத தவிர வேற என்ன தெரியும்ன்னு கூட நாம கேக்கலாம், என்கிறார் பிரியங்கா.



    மேலும் படிக்க - வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு

    அதோடு, அமீர், நிரூப், சிபி ஆகியோர் கிச்சனில் நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், எல்லாருக்கும் பத்துமான்னு பாத்துட்டு சாப்பிடுங்க கைஸ். ரைஸ், ஊறுகாய் எல்லாம் நீங்க எடுக்கும் போது எல்லாருக்கும் பத்திருக்குமான்னு பாத்துட்டு நீங்க சாப்பிடுங்க என்கிறார். இதனால் கோபமான சிபி, சாப்பிடும் போது இப்படி பேசுறது எனக்குப் பிடிக்கல. எதிரியா இருந்தாலும், சாப்பிடும் போது இப்படி பேசக் கூடாது என்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி