• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தூங்கும் பிரியங்கா... தண்டனை தரும் சிபி - காத்திருக்கும் சம்பவம்

தூங்கும் பிரியங்கா... தண்டனை தரும் சிபி - காத்திருக்கும் சம்பவம்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

மன்னிப்பு கடிதம் வழங்கினால் மட்டுமே பிரியங்காவை வீட்டிற்குள் விடுவேன் என்று சிபி சொல்ல, கட்டாயம் மன்னிப்பு கடிதம் எழுதி தரமாட்டேன் என பிரியங்கா முரண்டு பிடிக்கிறார்.

  • Share this:
    பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கண்டஸ்டண்டுகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள டாஸ்க் "கனா காணும் காலங்கள்". அனைத்து போட்டியாளர்களும் பள்ளிப்பருவ குழந்தைகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களாக மாறியுள்ளனர். அதில் தலைமை ஆசிரியராக வரும் சிபி, அனைத்து மாணவர்களுக்கும் கடுமையான பனீஷ்மெண்டுகளை கொடுக்கிறார்.

    ஐக்கி, அக்ஷரா ஆகியோர் தங்களது தலையை ப்ளாக் செய்ய வேண்டும், அப்போது தான் ஸ்கூலுக்கு உள்ளே விடுவேன் என கண்டிஷன் போடுகிறார். அதை கேட்டு இருவரும் தங்கள் தலைக்கு பிளாக் டை அடிக்கின்றனர். மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்களை முட்டி போடச் சொல்வது, டேபிள் மீது ஏறி நிற்கச்சொல்வது போன்ற பனீஷ் மென்டுகளையும் வழங்கி வருகிறார்.

    இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவிடம் பலர் உண்மையாக இல்லை என்றும், பிரியங்கா ஒரு ஜால்ரா என்றும் தாமரை கூறுவதாக அபிஷேக் பிரியங்காவிடம் தெரிவிக்க, எதையும் யாருக்கும் நிரூபிக்க நான் இங்கு வரவில்லை என பிரியங்கா காட்டமாக தெரிவிக்கிறார்.

    இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் 51ம் நாளிற்கான 3வது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் சிபிக்கும் பிரியங்காவுக்கு இடையே டாஸ்கால் மோதல் ஆரம்பானது போல தெரிகிறது. பள்ளி மாணவியாக இருக்கும் பிரியங்காவுக்கு ஆசிரியர் சிபி பனிஷ்மென்ட் கொடுத்து கார்டன் ஏரியாவுக்கு அனுப்பி விடுகிறார். மன்னிப்பு கடிதம் வழங்கினால் மட்டுமே பிரியங்காவை வீட்டிற்குள் விடுவேன் என்று சிபி சொல்ல, கட்டாயம் மன்னிப்பு கடிதம் எழுதி தரமாட்டேன் என பிரியங்கா முரடு பிடிக்கிறார். ப்ரோமோ ஆரம்பிக்கும் பொழுதே வருணிடம் பேசும் பிரியங்கா, சிபி மன்னிப்பு கடிதம் கேட்பதாக கூறுகிறார்.

    அதற்கு வருண் "எழுதித்தான் குடு.. உள்ள வந்து தூங்கு" என்கிறார். வீட்டிற்குள் இருக்கும் சிபியோ, " பிரியங்கா அடம் பிடித்தால் நம்ம ஒன்றும் செய்ய முடியாது. அவர் வீட்டிற்குள் வருவதற்கு ஒரு கடிதம் எழுதி கொடுக்க சொல்லுங்க" என்கிறார். இதையடுத்து பேசும் பிரியங்கா " நான் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குறதுல எனக்கு பிரச்சனை இல்ல. குச்சி யூஸ் பண்ண மாட்டேன்னு சிபியை சொல்ல சொல்லு " என்று பதிலளிக்கிறார். மேலும் அந்த ப்ரோமோவில் சிபி ஆசிரியர் வைத்திருக்கும் குச்சியுடன் ஹவுஸ் மேட்ஸை கண்டித்து வருவதும் காண்பிக்கப்படுகிறது.

    அடுத்த காட்சியில், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருக்கும் அமிர், "பிரியங்கா கேட்க மாட்றாங்களே" என்று சொல்ல அதற்கு சிபி "கேக்கணும்" என்று சொல்கிறார். உடனே அங்கு வந்த அபிஷேக் "கேட்க மாட்டாங்க... கேட்க கூடாது" என்று கூறுகிறார். வீட்டில் மாணவர்கள் கேட்டப்ப போட்டிருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கு சிபி பனீஷ்மென்ட் வழங்கி வருகிறார். ஆனால் பிரியங்கா அதை தட்டி கழிப்பது போல வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. சிபி வீட்டில் பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போலவே நடந்து கொள்கிறார் போல.



    ப்ரோமோவின் அடுத்த காட்சியில் சாரி என்று எழுதி கொடுப்பதில் என்ன இருக்கிறது என்று பிரியங்காவை பார்த்து வருண் கேட்க, பிரியங்கவோ, " வாய்ப்பே இல்லை. நான் ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பு பண்ணவே இல்லையே. எதுக்கு இவளோ பெரிய தண்டனை. ஒரு விஷயத்தை தட்டி தான் கேட்கணும் அப்படினா அது தப்பு கிடையாது" என்று கூறுகிறார். எனவே இறுதி வரை பிரியங்கா வீட்டிற்குள் நுழையவே இல்லை. கொட்டும் மழையில் பிரியங்கா கார்டன் ஏரியாவில் படுத்து உறங்குகிறார். இதனிடையே, இந்த வாரம் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: