பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக 71 நாட்களை நிறைவு செய்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வாரம் முழுக்க நடந்த பிரச்சனைகளை விவாதித்த பிறகு, திங்கள் அன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் அந்த வாரத் தலைவர் போட்டி மற்றும் போட்டியில் இருந்து வெளியேற நாமினேஷன் நடக்கும். திங்கட்கிழமை எபிசோடு மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்றைய எபிசோடில் தலைவர் போட்டியை வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளார் பிக்பாஸ்.
ஏற்கனவே வெளியாகியுள்ள முதல் இரண்டு ப்ரோமோக்களில், பிக் பஸ் சீசன் 5 ஃபினாலேவுக்கு ரேஸ் தொடங்கி விட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், எனவே ரேஸில் தரவரிசை படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என பிக் பாஸ் அறிவித்துள்ளார். பின்னர் ஒன்று முதல் பத்து வரை எண்கள் இருக்கின்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது. யார் சிறந்த போட்டியாளர் என்பதை தங்களுக்குள் விவாதித்து வரிசைப்படி யார் அந்தந்த ரேங்க்கில் நிற்க வேண்டும். பிக் பாஸ் தமிழின் முந்தைய சீசன்களிலும் இதே போன்ற ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது.
ஏற்கனவே வெளியான ப்ரோமோக்களின் படி, தன்னை விட சிறந்த போட்டியாளர் இருந்தால் முதல் இடத்தை எடுத்து கொள்ளலாம் என ராஜு கூறுகிறார். அப்போது பிரியங்கா நான் இரண்டாவது இடத்தை எடுத்து கொள்கிறேன் என கூறுகிறார். முதல் எண் எனக்கு பிடிக்கும் என கூறி சிபி அங்கு நின்று கொள்கிறார். ஆனால், கடுப்பான நிரூப், சிபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதற்கு சிபி, எனக்கு தகுதி இருப்பதாக நம்புவதாக கூறுகிறார். மேலும். உன்னை விட தைரியம், தில், கெத்து இருக்கிறது, உனக்கு அதில் எதுவும் இல்லை என்கிறார்.
இதையடுத்து வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், சிபிக்கு எதிராக அமீரும், சஞ்சீவும் விவாதிக்கிறார்கள். சிபி மற்றும் அமீர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. சிபி முதல் இடத்தில் இருக்கக் கூடாது என்று எதிர்த்து அமீர் பேசுகிறார். அப்போது, சிபியை நீங்கள் பயங்கரமான ஸேஃப் கேம் பிளேயர் என்று குற்றம் சாட்டுகிறார். புரிந்துகொண்டு பேசுமாறு சிபி அமீர் கூறியதை மறுக்கிறார்.
இந்த வாக்குவாதம் வலுத்து, மத்தவங்க கிட்ட பேசற மாதிரி நீங்க என்கிட்டே பேசாதீங்க என்று கூறும் போது, அமீர் டென்ஷனாகி உங்களைப் பத்தி பேசும்போது மத்தவங்க பத்தி பேசாதீங்க என்று கத்துகிறார். நான் பார்த்ததை தான் நான் சொல்கிறேன் என்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, பாவனி பத்தி ஏன் பேசின என்று அமீர் கத்தினார்.
அம்பதாவது நாள் வந்துட்டு அத சொல்லாத என்று பதிலுக்கு சிபி கடுப்பாக, விவாதம் வலுக்கிறது. மற்ற போட்டியாளர்கள் அமைதியாக இருந்த நிலையில் சிபி, பாவனியின் பேரை சொல்லியிருக்கக் கூடாது என்றும், அவர் பேசியது தான் தவறு என்றும் கூறினார்.
#Day71 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/0x4ZuovUHa
— Vijay Television (@vijaytelevision) December 13, 2021
மேலும் ராஜூ மூன்றாவது இடத்திலும், பாவ்னி 6-வது இடத்திலும் இருக்கும் காட்சிகள் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 5 வாரங்களே இருப்பதால் இனி வரும் நாட்களில் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் எந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்கள் என்பதை இன்று இரவு எபிசோடில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5