• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: ஸ்ட்ரிக்ட்டான சிபி... வாதம் செய்யும் அக்‌ஷரா ரெட்டி

Bigg Boss Tamil 5: ஸ்ட்ரிக்ட்டான சிபி... வாதம் செய்யும் அக்‌ஷரா ரெட்டி

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 5: நேற்றிலிருந்து பிக் பாஸ் வீட்டில் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் நடந்து வருகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ படு ரணகளமாக வெளியாகியிருக்கிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதோடு சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். தொடர்ந்து பாடகி இசைவாணி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில் நேற்றிலிருந்து பிக் பாஸ் வீட்டில் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் நடந்து வருகிறது. இதில் சிபி பள்ளியின் தலைமையாசிரியராகவும், ராஜு, அமீர் ஆகியோர் ஆசிரியர்களாகவும், மற்றவர்கள் மாணவர்களாகவும் இருக்கிறார்கள். தலைமையாசிரியர் சிபி மாணவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’சீருடையை அயர்ன் செய்ய வேண்டும்’ என அக்‌ஷரா கூற, ’சீக்கிரம் பண்ணிட்டு வா டைம் ஆகுது’ என்கிறார் சிபி. அதற்கு ‘நீங்க எனக்கு டைம் குடுத்தே ஆக வேண்டும்’ என அக்‌ஷரா வாதம் செய்ய, ’நீ அயர்ன் பண்ண வேணாம் போ’ என்கிறார் சிபி. இதனால் கோபமாகிறார் அக்‌ஷரா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: