• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5 : சிபியை பார்த்து அப்படியொரு கேள்வி கேட்ட அக்‌ஷரா

Bigg Boss Tamil 5 : சிபியை பார்த்து அப்படியொரு கேள்வி கேட்ட அக்‌ஷரா

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த போட்டியில் தாமரை கடைசியாக வருவதாக அவரிடம் பிரியங்கா பெயர் பொம்மை இருப்பதால் பிரியங்கா

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார தலைவராக அபினய் வெற்றி பெற்ற நிலையில், இசைவாணி தனது நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.மேலும் இதற்காக இந்த வாரம் முழுவதும் இசைவாணி சக போட்டியாளர்களுக்கு சர்வர் வேலை பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சக போட்டியாளர்களுக்கு தேவையான உணவுகளை இசைவாணி தான் மேஜை மீது கொண்டு வந்து வைத்து பரிமாற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் சற்று போரிங்காக சென்ற நிலையில், தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது. இன்று இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வித்தியாசமாக வழங்கப்படுவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற பெயரில் நடக்கும் இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்படுகிறது.

    ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும். இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்படுகிறது.

    இந்த போட்டியில் தாமரை கடைசியாக வருவதாக அவரிடம் பிரியங்கா பெயர் பொம்மை இருப்பதால் பிரியங்கா வெளியேற வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். நிரூப் தடுத்ததால் தான் தன்னால் வர முடியவில்லை என தாமரை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில், வருண் மற்றும் நிரூப் இடையே மோதல் ஏற்படுவது தெரிகிறது. பொம்மையை எடுப்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. நீ நியாயமாக விளையாடுகிறாயா? அசிங்கமாக இல்லை இப்படி பொம்மையை பிடித்து இழுக்கிறாய்? என வருண் கேட்கிறார். மேலும் நான் ஜாலியாக தான் விளையாடினேன், நீ இப்படி அசிங்கமாக விளையாடினால் நானும் அப்படி தான் விளையாடுவேன் என வருண் ஆக்ரோஷமாக பேசும் காட்சிகள் உள்ளது.

    https://twitter.com/vijaytelevision/status/1458004006622535687?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458004006622535687%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fvijaytelevision2Fstatus2F1458004006622535687widget%3DTweet

    அதற்கு நிரூப், இதனை கூற நீ யார்? என நிரூப் கேட்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவிலும், இந்த பிரச்னை தொடர்வது தெரிகிறது. இதில் நிரூபிற்கு ஆதரவாக சிபி பேசுகிறார், அதேபோல வருணிற்கு ஆதரவாக அக்ஷரா பேசுவது தெரிகிறது. அப்போது சிபி, செண்பகமே செண்பகமே டாஸ்கில், அக்ஷ்ராவும் இப்படி தானே செய்தார், அது தப்பு இல்லை என்றால் இதுவும் தப்பு இல்லை என்கிறார். இதனால் கடுப்பாகும் அக்ஷ்ரா, என்ன தப்பு இல்லையா? அறிவு இல்லையா? என ஆக்ரோஷமாக கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று சிறப்பான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: