ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 5: சிபிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வெடித்த சண்டை

Bigg Boss Tamil 5: சிபிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வெடித்த சண்டை

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இன்றும் பிக் பாஸ் வீட்டில் ரெட் டிவி, ப்ளூ டிவி டாஸ்க் தொடர்வதாக தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

  இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

  இன்றும் பிக் பாஸ் வீட்டில் ரெட் டிவி, ப்ளூ டிவி டாஸ்க் தொடர்வதாக தெரிகிறது. தாமரையும், வருணும் அமர்ந்திருக்க, அவர்களிடம் பிரியங்காவும், சிபியும் கேள்வி கேட்க தயாராகிறார்கள். அண்ணாச்சியை பத்தி உங்க கருத்து என்ன தாமரை என சிபி கேட்க, அபிஷேக் கோபமாகிறார். இதையடுத்து சிபிக்கும் அபிஷேக்கிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ் இறுதியாக ‘சைலன்ஸ்’ என கத்துகிறார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 5