• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: அக்‌ஷராவுக்கும் சிபிக்கும் இடையே மீண்டும் தொடங்கிய வம்பு..!

Bigg Boss Tamil 5: அக்‌ஷராவுக்கும் சிபிக்கும் இடையே மீண்டும் தொடங்கிய வம்பு..!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

சிபியின் கமெண்ட்டால் கடுப்பான அக்ஷரா, நீங்கள் பேசுவதை ஒழுங்கா பேசுங்க. அதபன்னாங்க, இதபன்னாங்க என்று சொல்லாதீர்கள். சரியாக பேசுங்கள் என்று கூறுகிறார்.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் 54-ம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் பாதாள சிறையில் அடைபட்டிருக்கின்றனர். அப்போது, அமிர் தாமரை பற்றி தனது காணோட்டத்தை நிரூப்பிடம் பகிர்ந்துகொள்கிறார்.

    அப்போது அமிர், தாமரையிடம் எல்லோரும் ஏமாறுகிறீர்கள். ரொம்ப க்ளவ்ரா இருக்காங்க. யாருக்கும் தெரியவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை என்று சொல்கிறார். உடனே நிரூப் அவர்களின் அறியாமை பற்றி பேச ஆரம்பிக்கிறார். அதற்கு அறியாமை எல்லாம் இல்லை என அமீர் சொல்கிறார். எல்லோரிடமும் தன் மீது ஒரு பரிதாபத்தை உருவாக்கி கொள்கிறார் என நினைக்கிறேன். என் கண்ணிற்கு தாமரை நெகட்டிவாக தான் தெரிஞ்சாங்க" என்று சொல்கிறார். அதோடு முதல் ப்ரோமோ முடிகிறது.

    இன்றைய நாளின் 2-வது ப்ரோமோ ஆரம்பமாகும் போதே அனைவரும் லிவ்-இன் ஏரியாவில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் குறித்து பேசும் அக்ஷரா, "என்னை பொறுத்தவரை சிபி, அவரு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ண மாதிரி இருந்தது" என்று சொல்கிறார். அடுத்ததாக பேசிய சிபி, எனக்கு டவுட் ஏதும் இல்ல. அக்ஷரா தான். டாஸ்க்கே புரியாம விளையாடுனாங்க. சுட்டிக் குழந்தையா இல்லாம, ஓரமா மூக்கை சிந்திக்கொண்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அதனால் அக்ஷராவை நான் சொல்வேன்" எனக் கூறுகிறார். சிபியின் கமெண்ட்டால் கடுப்பான அக்ஷரா, நீங்கள் பேசுவதை ஒழுங்கா பேசுங்க. அதபண்ணாங்க, இதபண்ணாங்க என்று சொல்லாதீர்கள். சரியாக பேசுங்கள் என்று கூறுகிறார்.

    உடனே குறுக்கிட்ட சிபி, "நான் சொல்ல வேண்டியதை தான் சொல்லுவேன். நான் அப்படிதான் சொல்லுவேன். அழுதுகிட்டே இருந்தீங்க. சுட்டிக் குழந்தை என்பதற்கான மீனிங் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை" என்று தெரிவிக்கிறார். உடனே அக்ஷரா மிகுந்த கோபமடைகிறார். இவர்களின் உரையாடலை வைத்து பார்க்கும் போது, கனா காணும் காலங்கள் டாஸ்கில் யார் சுவாரசியமாக பண்ணவில்லை என்று பிக்பாஸ் கேட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் டாஸ்கின் அடிப்படையில் யார் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்தது. யார் சரியாக செய்யவில்லை என்பது லிவ்இன் ஏரியாவில் வைத்து கேட்கப்படும்.



    அதில், சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்தவார தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சரியாக விளையாடாத போட்டியாளர்களுக்கு பாதாள சிறை தண்டனை வழங்கப்படும். அதன்படி இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நிரூப் மற்றும் அமீர் பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரை தேர்தெடுப்பதற்கு முன்பாக நடந்த உரையாடல் தான் 2-வது ப்ரோமோவாக வெளியாகியிருக்கிறது.

    பிக் பாஸ் 5-ல் தற்போது 3 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அதில் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். அதன் பிறகு டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து நேற்று நடிகர் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டில் நுழைந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: